Cinema History
இப்படி ஒரு பொம்பளையா? கொடுமைக்காரி!.. தாய்மார்களிடம் திட்டு வாங்கிய சி.கே.சரஸ்வதி…
அந்தக்காலப் படங்களில் வில்லியாக நடித்து அசத்தியவர் யார் என்றால் டக்கென்று நம் நினைவுக்கு வருபவர் சி.கே.சரஸ்வதி. தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடும் ஆற்றல் படைத்தவர். இவரது வாழ்க்கை குறிப்புகளைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
1945ல் வெளியான ‘என் மகன்’ சி.கே.சரஸ்வதிக்கு முதல் படம். 1998 வரை தமிழ்த்திரை உலகில் வலம் வந்தார். 40 ஆண்டுகளாகத் தமிழ்த்திரை உலகில் பல்வேறு வகையான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
1948ம் ஆண்டு சுதர்ஸன் படம் முழுவதும் எடுத்துவிட்டார்கள். ஆனால் 3 ஆண்டுகள் கழித்துத் தான் படம் வெளியானது. அந்தப் படத்திலும் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வடிவாம்பாள் கேரக்டரில் வந்து அசத்துவார். இந்தப்படத்தில் நடித்த கதாநாயகி பத்மினிக்கு அம்மா தான் இவர். குண்டான உடல். கணீர் குரல். ஏற்ற இறக்கத்துடன் பேசுவதில் வல்லவர்.
இதையும் படிங்க: ஜெமினி கணேசன் படத்துக்கு சம்பளத்தை குறைக்க சொன்ன என்.டி.ராமராவ்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?…
வாணி ராணி படத்தில் இடைவேளை வரை அமைதியான நடிப்பை வெளிப்படுத்தினார். அதன்பிறகு வாணிஸ்ரீக்கு கொடுமைக்கார சித்தியாக வந்து மிரட்டி விடுவார். அதே போல மற்றொரு ஆர்ப்பாட்டமான வாணிஸ்ரீயிடம் செமத்தியாக அடியும் வாங்குவார்.
லட்சுமி கல்யாணம் படத்தில் நிர்மலாவுக்குக் கல்யாணம் ஆகாமல் தடுக்கும் கேரக்டரில் வருவார் சி.கே.சரஸ்வதி. அப்போது இவர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. தான் நடிக்கும் எல்லாப் படங்களிலுமே கொடூரமான வில்லியாக வருவதால் தாய்மார்களிடம் சாபங்களை அதிகமாகப் பெற்று வரவேற்புக்குள்ளானர்.
எம்.என்.நம்பியாருடன் குலமா குணமா படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார். ரசிகர்கள் இருவருமே வில்லன், வில்லி என்பதால் பொருத்தமான ஜோடிதான் என்றும் ஜாடிக்கேத்த மூடி என்றும் புகழாரம் சூட்டினர்.
இதையும் படிங்க: பாலச்சந்தரையே ரிஜெக்ட் பண்ண ஜெமினி கணேசன்!.. அப்புறம் நடந்ததுதான் பெரிய டிவிஸ்ட்!..
ராஜகுமாரி, சோப்பு சீப்பு கண்ணாடி, பொன்முடி, எங்க மாமா, தூக்கு தூக்கி, தாய், மகேஸ்வரி, திகம்பர சாமியார், மாங்கல்ய பாக்கியம், வண்ணக்கிளி, மங்களவாத்தியம், பூலோக ரம்பை, உழைக்கும் கரங்கள், கண்ணே பாப்பா ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
அதுமட்டுமா சிங்காரி, லட்சுமி கல்யாணம், பார்த்தால் பசி தீரும், கல்யாண ஊர்வலம், நானும் ஒரு பெண், மன்னிப்பு, தாயே உனக்காக, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்ம், சௌபாக்கியவதி, உரிமைக்குரல், படித்தால் மட்டும் போதுமா என இவர் நடித்த படங்கள் அனைத்துமே செம மாஸ் ஹிட். இவர் கடைசியாக நடித்த படம் பொன்மானைத்தேடி. இது 1998ல் வெளியானது. அதே வருடத்தில் தான் இவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.