Connect with us

Cinema History

புகழின் போதையில் வாழ்க்கையைத் தொலைத்த பழம்பெரும் நடிகை….கடைசி காலத்தில் அந்தோ பரிதாபம்…!

1000க்கும் மேற்பட்ட நாடகங்கள், 75க்கும் மேற்பட்ட படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர் பழம்பெரும் நடிகை காந்திமதி.

ஒரு கட்டத்தில் நடிகைகள் பேரும் புகழுமாக உச்சத்தில் இருக்கும் போது கல்யாணம் கட்டுவதையே மறந்து விடுகிறார்கள். தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பார்கள்.

அதன்பிறகு எனக்குத் திருமணமே வேண்டாம் என்று விடுவார்கள். கடைசி காலத்துல தனக்கென யாராவது வேண்டுமே என்று ஆசைப்படும் அவர்கள் தங்கள் உறவினர்களை நம்பியே இருப்பார்கள். தன் கூட பிறந்தவர்களை நம்பி இருப்பாங்க.

அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைத் தன்னுடைய குழந்தைகளாக தத்தெடுத்து வளர்ப்பாங்க. அவங்க வளர்ந்ததுக்குப் பிறகு தனது சொந்த அப்பா அம்மாவிடம் போய்விடுவாங்க. கொஞ்சநாள் கழித்துப் பார்த்தால் வளர்த்தவங்கள மறந்துடுவாங்க. அதன்பிறகு வளர்த்தவங்க தனியாயிடுவாங்க.

இது மாதிரியான சம்பவங்களை நாம் நிறைய கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் நிஜத்திலும் நடந்துள்ளது. அதுவும் ஒரு நடிகை என்றால் நம்ப முடிகிறதா? வேறு யாருமல்ல. அவர் தான் சினிமாவில் 80களில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகை காந்திமதி.

Ganthimathi 3

திரைத்துறையில் தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்டு பல படங்களில் முத்திரை பதித்தவர் தான் காந்திமதி. நடிக்கும்போது தன்னை எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவருடனும் நல்லா பழகுவார். மற்றவங்களையும் சிரிக்க வைச்சி சந்தோஷப்படுத்துவார். கடைசியில் அவங்களுக்குன்னு ஒரு கஷ்டம் வரும்போது கூட இருந்து பார்த்துக்க யாருமில்லாமல் அனாதை மாதிரி கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து காலமானார் என்பது வருத்தமான விஷயம்.

இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் 30.8.1945ல் பிறந்தார். ஆயிரக்கணக்கான நாடகங்களில் நடித்துள்ளார். இவருடைய காலகட்டத்தில் தான் நடிகை மனோரமாவும் நடித்துக் கொண்டு இருந்தார்.

Ganthimathi 2

நிறைய படங்களில் நடித்து வந்தார். ஆனால் மனோரமா அளவுக்கு வரவில்லை என்றாலும் காந்திமதியின் நடிப்பை அனைவரும் ரசிக்கவே செய்தனர்.

தனது 3வது வயதில் வேதாள உலகம் படத்தில் 1948ல் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் காந்திமதி. அதன்பிறகு 1965ல் வெளியான இரவும் பகலும் படத்தில் நடித்தார்.

இந்தப்படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு அடிமைப்பெண், தேன்மலை, திருமலை தென்குமரி, குமரிப்பெண், காலம் வெல்லும், சவாலே சமாளி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.

நாகேஷ், சுருளிராஜன் ஆகிய காமெடி நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்து அசத்தினார். காந்திமதியோட பிளஸ் பாயிண்டே அவரது குரலும், உச்சரிக்கும் விதமும் தான். அந்த ஸ்லாங்கே தனி அழகு. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

கரகாட்டக்காரன், பதினாறு வயதினிலே படங்களில் அவரது உடல் மொழி, பேசும் விதம் மிகவும் ரசிக்கும் விதத்தில் இருந்து படத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அவர் திட்டுவது, சொலவடை சொல்வது தாய்மார்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து ரசிக்க வைத்தது.

16 Vayathinile Kamal, Ganthimathi

சிறுசிறு வேடங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். அதன்பிறகு அக்கா, அண்ணி, பாட்டி வேடங்களில் நடித்து தாய்மார்களின் பேராதரவைப் பெற்றார்.

இவர் பெரும்பாலும் கிராமப்புறத் தோற்றத்திலும் அந்த வேடங்களிலுமே நடித்துள்ளார். அறிமுகமான புதிதில் இவர் கிளாமரான வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

80களில் மூன்றாம்பிறை, நேரம் வந்தாச்சு, மண்வாசனை, உயிருள்ளவரை உஷா, புதிய தீர்ப்பு, சாவி, சிதம்பர ரகசியம், நட்பு, ஆயிரம் கண்ணுடையான், சோலைக்குயில் ஆகிய படங்களில் காந்திமதியின் நடிப்பு தனி முத்திரை பதிக்கும் விதத்தில் அமைந்து இருந்தது.

90களில் பெரிய வீட்டுப்பண்ணக்காரன், என் காதல் கண்மணி, ஞானப்பார்வை, ஊர்மரியாதை, இது நம்ம பூமி, திருமதி பழனிச்சாமி, நாடோடி பாட்டுக்காரன், வால்டர் வெற்றிவேல், தாலாட்டு, மிஸ்டர் மெட்ராஸ், ஆணழகன், முத்து, நேசம் புதுசு ஆகிய படங்களில் செம சூப்பராக நடித்து அசத்தினார்.

2000களில் பொன்னான நேரம், தவசி, அன்புத் தொல்லை, விருமான்டி, சேட்டை, ஒருமுறை சொல்லிவிடு, ஐயா ஆகிய படங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2006ல் வெளியான ஐயப்பா சுவாமி.

Ganthimathi 4

ஒரு கட்டத்தில் காந்திமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு ஓரளவு குணமாகி வந்தார். தொடர்ந்து படங்களில் நடிக்காமல் டிவி சீரியல்களில் நடித்தார். மை டியர் பூதம் தொடரில் பாட்டியாக வருவார். அதன்பிறகு கல்கி, கோலங்கள், பொண்டாட்டி தேவை ஆகிய சீரியல்களில் நடித்து அசத்தினார்.

தனது சகோதரி வீட்டில் தான் தங்கினார். தம்பி பசங்களைத் தான் தத்தெடுத்து வளர்த்து வந்தார். தனக்கு வயதான போது, இவரைக் கவனிக்க யாருமில்லை. உறவினர்களும், முன்வரவில்லை. இவருக்கு புற்றுநோய் வந்த சமயத்தில் இவரைக் கவனிக்க ஆள் இல்லாமல் போய்விட்டது.

இவரிடம் பணம் இருக்கும் வரை தான் இவரை எல்லோரும் சுற்றி சுற்றி வந்தனர். இவர் வளர்த்த தம்பி பிள்ளைகளும் கல்யாணம் முடிஞ்சி தனியாகப் போயிட்டாங்க. பதினாறு வயதினிலே படத்தில் குருவம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கடைசியில் பரிதாபமாக இறந்துவிடுவார்.

இதே போல தான் தனது நிஜவாழ்க்கையிலும் அவருக்கு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 9.9.2011ல் காலமானார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top