Connect with us

Cinema History

தமிழ்சினிமாவில் 70…80களில் செம பிசியான ஹீரோயின்…குணச்சித்திரத்திலும் இவர் தான் குயின்…!!!

இவர் நடிப்பால் தாய்க்குலங்களைக் கவர்ந்தவர். பார்த்தால் பச்சா தாபம் தெரியும். அவ்வளவு கருணை பார்வை. அம்மா கேரக்டரில் இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற அளவில் நடித்து விட்டார். அவர் யார் என்று பார்க்கலாமா…!

1952 டிச. 10 இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள தெல்லிப்பழையில் பிறந்தார். பூர்வீகம் என்று பார்த்தால் கேரளாவில் உள்ள காளே தான். ஆனால் இவர் தனது 13வது வயது வரை படித்தது, வளர்ந்தது எல்லாமே இலங்கையில் தான்.

sujatha

இவரது தந்தை கொழும்பில் அமைந்துள்ள ராயல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தாய்மொழி மலையாளம் என்றாலும், சிங்களம் நன்றாகப் பேசக்கூடியவர். 1967ல் பணியிலிருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் தாயகம் திரும்பினார். கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் குடும்பத்துடன் குடியேறினர்.

தையல் பயிற்சி பெற்ற சுஜாதா படிக்கலாமா வேலைக்குப் போகலாமா என்ற எண்ணம் இருந்தது. சுஜாதாவின் அம்மாவுக்கோ இவரை நடிகையாக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. தனது விருப்பத்தைத் தன் கணவரிடம் கூற, அவருக்கோ அதில் சிறிதும் விருப்பம் இல்லை. இருந்தாலும் மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கேற்ப அவரது சொல்லைத் தட்டவில்லை.

1965ல் சுஜாதா சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அம்மு, காட்டுப்பூக்கள் என படங்களில் நடித்து வந்தார். 1971ல் இவருக்கு தபஸ்வீணா என்ற மலையாளப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காதலிக்க பயப்படும் பெண்ணாக நடித்தார். வெகு அருமையாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

1973 ல் வெளியான சுழி என்ற மலையாளப்படத்தில் நடிகை சாவித்ரியின் மகளாக நடித்தார். 3 ஆண்டுகளில் 35 படங்களுக்கும் மேல் நடித்த போதும் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. இதற்குக் காரணம் இவர் 2ம் கட்ட நாயகியாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்ததும் தான்.

1974ல் சுஜாதாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் தமிழில் வெளியான இயக்குனர் பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை. முதலில் தமிழ் பேசத் தெரியுமா என இயக்குனர் பாலச்சந்தர் கேட்டார். அதற்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்று சிங்களம் கலந்த தமிழில் பேசினார். உடனே என் படத்திற்கு நீ தான் ஹீரோயின்.

தமிழ் பத்திரிகைகளை வாசித்துப் பழகினால் தமிழ் பேசி விடலாம் என்றார். பட பூஜையின் போது தமிழில் பேசி அசத்தினார் சுஜாதா. அந்த அளவு நடிப்பின் மேல் அவருக்குள்ள ஆர்வம் உண்மையாக இருந்தது. அவள் ஒரு தொடர்கதை வெள்ளிவிழா படமானது.

sujatha

தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து அசத்தினார். 300க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தார். அவர்கள், கடல் மீன்கள், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, மயங்குகிறாள் ஒரு மாது, அமைதிப்படை, விதி, உழைப்பாளி, பாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அல்டி மேட் ஸ்டார் அஜீத்துடன் வரலாறு, அட்டகாசம் போன்ற படங்களில் அவருக்குத் தாயாக நடித்தார். இவர் கடைசியாக நடித்த படம் வரலாறு. 1977ல் ஜேகர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். மகள் டாக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

இருதயநோயால் பாதிக்கப்பட்டு வந்த சுஜாத ஏப்.6, 2011ல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top