கண்ணதாசனை வெகுநேரம் காக்க வைச்ச நடிகர்!.. பொங்கி எழுந்த நடிகவேள்.. என்ன செய்தார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர்களில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் ஒருவர். எம்.ஆர். ராதா படங்களுக்கு அவருக்காக பல பாடல்களை எழுதி மக்களின் ரசனையை தூண்டியவர் கண்ணதாசன். கண்ணதாசன் பாடல் இல்லாத கம்பெனி நிறுவனம் அந்த காலத்தில் இருக்கிறதா என்றால் இல்லை.
அந்த அளவுக்கு எல்லா பட நிறுவனங்களுக்கும் தன்னுடைய பாடல் வரிகள் மூலம் விருந்து படைத்தவர் கண்ணதாசன். பாடல் எழுதுவது மட்டுமில்லாமல் படங்கள் தயாரிக்கவும் முனைப்பு காட்டினார் கவிஞர். ஒரு சில படங்களை தயாரித்த கண்ணதாசன் சில சமயங்களில் தான் தயாரித்த படங்களாலேயே மிகவும் இன்னல்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.
நடிகர் சந்திரபாபுவை வைத்து கவலையில்லாத மனிதன் என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். ஏற்கெனவே தமிழ் சினிமாவில் சந்திரபாபு மீது பல விமர்சனங்கள் உண்டு. படப்பிடிப்பிற்கு சரியாக வரமாட்டார் என்று. அதனாலேயே தான் தயாரிக்கும் படம் என்பதால் சந்திரபாபு வீட்டிற்கே சென்று அவரை கையோடு அழைத்து வரலாம் என்று வீட்டில் காத்துக் கொண்டிருந்தாராம் கண்ணதாசன்.
இதையும் படிங்க : டான்ஸ் வேணுமா..இருக்கு..ஃபைட் வேணுமா..இருக்கு..காமெடி வேணுமா..இருக்கு!.. இப்படி எல்லாம் இருந்தும் முன்னுக்கு வராத நடிகர்கள்..
பல மணி நேரங்கள் ஆன நிலையில் அவரின் வீட்டு வேலையாளிடம் கேட்க அவர் பின்வழியாக தப்பி ஓடிவிட்டார் என்று கூறியிருக்கிறார். உடனே சோகத்தின் முழு உருவாக இருந்த கண்ணதாசன் நேராக அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அங்கு எம்.ராதாவும் டி.எஸ்.பாலையாவும் வந்திருக்கின்றனர்.
சோகமாக இருந்த கண்ணதாசனைப் பார்த்து என்ன என கேட்க விஷயம் அறிந்து கோபத்தின் உச்சியில் அவர்கள் இருவரும் காரை எடுத்துக் கொண்டு அவர் எங்கு இருந்தாலும் அழைத்துக் கொண்டு வருகிறோம் என்று சென்று கையோடு சந்திரபாபுவை அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். அந்த அளவுக்கு கண்ணதாசன் மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவராக இருந்திருக்கிறாராம் எம்.ஆர்.ராதா. இதை கண்ணதாசனின் மகனான அண்ணாத்துரை கண்ணதாசன் அவரின் யுடியூப் சேனல் மூலம் கூறினார்.