ஒவ்வொருத்தரா வாக் அவுட் ஆகுறதுக்கு… மொத்தமா தக் லைஃப் படத்தை முடிச்சி விடுங்கப்பா!...

Thug Life: கமல் நடிப்பில் உருவாக இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் அடுத்ததாக இன்னொரு முன்னணி நடிகரும் வெளியேறி இருக்கிறார். இதனால் இப்படத்தின் அடுத்த கட்டம் நகருமா? நகராதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பே பலரிடத்திலும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதையும் படிங்க: ஐயோ இத பாக்க ரெண்டு கண்ணும் பத்தாது!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் அஞ்சலி!.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் கமலுடன் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க இருந்தனர். ஆனால் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளி போனதால் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகினார். அவரின் கேரக்டருக்கு நடிகர் சிம்புவை படக்குழு பேசியது. அந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து அதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே சிம்புவுடன் மோதலில் இருந்த ஜெயம் ரவி அவர் நடிக்கும் படத்தில் தான் நடிக்க இயலாது என வெளியேறினார் எனக் கிசுகிசுக்கப்படுகிறது. அவர் கேரக்டருக்கு தற்போது அரவிந்த் சாமி உட்பட சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறதாம். இந்நிலையில் அப்படத்தில் நடிக்க இருந்த சித்தார்த் தற்போது படத்தில் இருந்து விலகி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: வேணாம்பா!. அஜித் ஃபேன்ஸ் ரொம்ப கலாய்ப்பாங்க!.. விஜய் நடிக்க தயங்கிய அந்த வேடம்!..

ஏற்கனவே மணிரத்னத்திடன் உதவி இயக்குனராக வேலை செய்து வந்தவர் சித்தார்த். தற்போது சித்தா வெற்றிக்கு பின்னர் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருவதால் தக் லைஃப் படப்பிடிப்பு லேட்டாவதும் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதற்குள் வெளியேறிய நடிகர்களுக்கான மாற்று நடிகர்கள் முடிவு செய்யப்பட வேண்டும் என படக்குழு தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story