‘கோட்’ ரிலீஸை முன்னிட்டு மொத்த ஊழியர்களுக்கும் லீவு! யாருப்பா அந்த மகான்?

Published on: September 4, 2024
goat
---Advertisement---

Goat Movie:நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கோட் திரைப்படம் ரிலீசாக இருக்கின்றது. விஜய் ரசிகர்களிலிருந்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுமே இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் விஜயின் அரசியல் வேகம்.

அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் அரசியல் சம்பந்தமான வசனங்கள் ஏதாவது படத்தில் இருக்குமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதே சமயம் படத்தில் அதுவும் விஜய் படத்தில் இதுவரை இல்லாத ஒரு நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவைப் பற்றி தெரியணுமா?? இந்த நான்கு படங்களை பாருங்கள்.. விக்ரம் பளீச்

அதனால் அவர்களுக்கு உண்டான முக்கியத்துவம் கோட் படத்தில் எப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு காலத்தில் அனைவரும் முன்னணி ஹீரோக்களாக ஹீரோயின்களாக இருந்தவர்கள்.

அனைவரும் ஒரே படத்தில் இருப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதனால் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் தான் வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் சேர்ந்து சினேகா லைலா மீனாட்சி சௌத்திரி பிரபுதேவா பிரசாந்த் அஜ்மல் மோகன் யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: தளபதி விஜய்க்குப் பிடிச்ச தல படம்… மட்ட சாங் முதல்ல பாட்டாவே இல்லையாம்..!

படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை ஒரு உற்சாகத்தில் வைத்திருக்கிறது கோட் பட குழு. அதுவும் வெங்கட் பிரபு பிரேம்ஜி வைபவ் அஜ்மல் போன்றவர்களின் பேட்டிகளும் படத்தின் ஹைப்பை இன்னும் உயர்த்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு படத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி தன் கம்பெனியில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்துள்ளதாக ஒரு தனியார் நிறுவனத்தைப் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: கோட் படத்துல SK, திரிஷா….மிச்சம் மீதி உள்ள சஸ்பென்ஸையும் உடைத்த பிரபலம்

goat1
goat1
#image_title

சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் parkqwik என்ற ஒரு தனியார் நிறுவனம் கோட் ரிலீஸை முன்னிட்டு தன் கம்பெனியில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் கோட் படத்தின் டிக்கெட்டுடன் சேர்த்து விடுமுறை அளித்துள்ளதாகவும் இதை நாங்கள் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தன்னுடைய அறிக்கையின் மூலமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த ஒரு அறிக்கை தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.