100 ரூபா தான் சம்பளமாம்…! உண்மையை போட்டு உடைத்த அஞ்சாதே பட நடிகர்!

anjathe
சினிமாவில் பல யதார்த்தமான நடிகர்கள் இருக்காங்க. இவங்க படத்துல பார்த்தா நடிக்கிற மாதிரியே இருக்காது. சாதாரணமாக சக மனிதர்கள் மாதிரி பேசிட்டப் போய்க்கிட்டே இருப்பாங்க. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நடிகர் காளி வெங்கட்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள குடையதேவன்பட்டியைச் சேர்ந்தவர் நடிகர் காளி வெங்கட். இவர் தெகிடி, முண்டாசுப்பட்டி படங்களின் மூலமாகப் பிரபலமானார். இவர் பெரும்பாலும் கதாநாயகனின் நண்பராகவோ, குணச்சித்திர வேடத்திலோ நடிப்பார்.
காளிவெங்கட் ஈஸ்வரன், சார்பட்டா பரம்பரை, சூரரைப் போற்று, மாரி2, கழுகு2, ராட்சசன், மெர்சல், வேலைக்காரன், மரகத நாணயம், ஈட்டி, இறுதிச்சுற்று, மாப்ள சிங்கம், அஞ்சாதே, கொடி உள்பட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து இப்படி சொல்கிறார். ஆச்சரியம். ஆனால் அதுதானே உண்மை. என்னன்னு பாருங்க.

என்னுடைய முதல் சம்பளம் அஞ்சாதே படத்துக்காக 100 ரூபாய் கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி 10, 15 படம் பண்ணி இருப்பேன். அதுக்கு சம்பளம் எல்லாம் வந்தது இல்ல. ஏன்னா, நடிக்க கூட்டிட்டு போறது பெரிய விஷயம் என்பது போல் தான் இருக்கும். அஞ்சாதே படத்தில் ஒரு நாள் நடிச்சேன். .
அதுக்கு 100 ரூபாய் கொடுத்தாங்க. அது பேட்டாவா சம்பளமான்னு தெரியல. அதை நான் சென்டிமென்டா பிரேம் பண்ணி வைக்கல. அதுவும் காசு தானே. அதை செலவு பண்ணா தான் அதுக்கு மரியாதை. அதை வச்சிருந்தா அது வெறும் பேப்பர் தான். அன்னைக்கே அதை செலவு பண்ணிட்டேன் என்கிறார் காளி வெங்கட்.
சாதாரணமாக 100 ரூபாய் சம்பளத்தில் திரையுலகில் காளி வெங்கட் சாதாரண நடிகராக நுழைந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அந்தளவு அவரது வளர்ச்சி அபாரமாக உள்ளது என்றே சொல்லலாம்.