Connect with us

Cinema History

கமலுக்கு மட்டும் இப்படி ஒரு சலுகையா? சிவாஜியை ஏமாற்றிய ஏ.வி எம் நிறுவனம்!..

தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளுக்காக அலையும் ஒவ்வொரு இயக்குனருக்கும் நடிகருக்கும் அவர்களது முதல் படம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் முதல் திரைப்படமே அவர்கள் சினிமாவில் தொடர்ந்து இருக்கப் போகிறார்களா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும். எனவே குறைவான சம்பளம் கிடைத்தாலும் கூட பரவாயில்லை என்று முதல் படங்களில் கமிட் ஆகின்றனர் இயக்குனர்களும் நடிகர்களும்.

நடிகர் ரஜினிகாந்த் கூட ஆரம்ப கட்டத்தில் மிக குறைவான சம்பளத்திற்குதான் திரைப்படங்களில் நடித்தார் என கூறப்படுகிறது. 16 வயதினிலே திரைப்படத்திற்கு கூட ஆயிரங்களில்தான் சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது.

SHIVAJI

SHIVAJI

சிவாஜி கணேசனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அவரது முதல் படமான பராசக்தி திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைத்த பொழுது பல விமர்சனத்திற்கு உள்ளானார் சிவாஜி கணேசன். அவரது முகம் மற்றும் தோற்றம் கதாநாயகனுக்கு உகந்ததாக இல்லை என கூறி பலரும் அவரை கேலி செய்தனர். இருந்தாலும் சிவாஜியின் நடிப்பின் மீது இயக்குனருக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக அந்த படத்தில் வாய்ப்பை பெற்றார் சிவாஜி கணேசன்.

இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் இயக்கியது படத்திற்கு சம்பளமாக 25 ரூபாய்தான் ஏ.வி.எம் கொடுத்தது. அப்பொழுது நாடகங்களில் நடித்ததற்கே அதைவிட அதிகமாக சம்பளம் வாங்கினார் சிவாஜி கணேசன்.

இருந்தாலும் முதல் படம் என்பதால் கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார் சிவாஜி. ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் இப்படி நடப்பதில்லை உதாரணமாக நடிகர் கமல்ஹாசனும் ஏ.வி.எம் நிறுவனம் மூலமாகவே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கமல்ஹாசன். அவரது சிறப்பான நடிப்பை பார்த்து அந்த படத்தின் திரைக்கதையையே மாற்றி அமைத்தார் தயாரிப்பாளர்.

இதனால் கமல்ஹாசனுக்கு அதிக காட்சிகளை வைத்தார் தயாரிப்பாளர். அதே சமயம் அந்த படத்திற்கு சம்பளமாக கமல்ஹாசனுக்கு ஆயிரங்களில் சம்பளம் கொடுத்துள்ளார் ஏவி மெய்யப்பன் செட்டியார். கமல்ஹாசனுக்கு ஆயிரங்களில் சம்பளம் கொடுத்த ஏ.வி மெய்யப்ப செட்டியார் சிவாஜி கணேசனுக்கு மட்டும் 250 ரூபாய் சம்பளமாக கொடுத்தது விந்தையான விஷயமாகவே உள்ளது.

இதையும் படிங்க: அஜித்தை பத்தி தெரியாம பேசுறாங்க – இத நிறுத்துனா நல்லது! பத்திரிக்கையாளர் ஆவேசப்பேட்டி

google news
Continue Reading

More in Cinema History

To Top