வேற மொழிப்படங்களா?.. நோ நோ.. தமிழ்ப்படங்களில் மட்டுமே கெத்து காட்டிய நடிகர்கள்...

VkSSV
பிற மொழிப்படங்களில் நடிக்க எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், தாய்மொழியான தமிழில் மட்டுமே நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று தன் கொள்கையை உறுதியாகக் கடைபிடித்த நடிகர்களும் தமிழ்த்திரை உலகில் உள்ளனர். அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
கட்டிய புருஷனே சொல்லிட்டாரு… இனி அந்த மாதிரி சீன்ல வெளுத்து வாங்கப் போகும் ஆனந்தி
கேப்டன் விஜயகாந்த்
1979ல் வெளியான இனிக்கும் இளமை படத்தில் கேப்டன் விஜயகாந்த்தை இயக்குனர் எம்.ஏ.காஜா அறிமுகப்படுத்தினார். கேப்டனின் 156வது படம் தமிழன் என்று சொல். விஜயகாந்த் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவரது அட்டகாசமான பைட் தான். தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். இவருக்கு எத்தனையே தெலுங்கு பட வாய்ப்புகள் வந்த போதும் மறுத்துவிட்டாராம்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
இதையும் படிங்க... விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்
அந்தக் காலத்தில் லட்சிய நடிகர் என்ற அடைமொழியுடன் தமிழ்த்திரை உலகில் வலம் வந்தவர் எஸ்எஸ்ஆர். இவர் தாய்மார்களின் மத்தியில் பேராதரவு பெற்றவர். பகுத்தறிவு கொள்கைகளில் பற்று கொண்டவர். அந்த ஒரே காரணத்திற்காக இவருக்கு அதிக சம்பளம் தந்து பக்தி படங்களில் நடிக்க அழைத்தபோதும் மறுத்து விட்டாராம். அதே போல பிற மொழிப்படங்களிலும் நடிக்காத நடிகர் இவர்.
விஜய்
தளபதி விஜய் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் விஜய். இவர் இதுவரை பிற மொழிப்படங்களில் நடித்ததே இல்லை. மலையாளத்திரை உலகம் இவரை வா வா என்று வாஞ்சையுடன் அழைத்த போதும் அதற்கு செவிசாய்க்காமல் தமிழை மட்டும் சுவாசிக்கும் வகையில் தமிழ் மொழிப்படங்களில் மட்டுமே நடித்தார். தான் நடித்த படத்திற்குக் கூட தமிழன் என்று தலைப்பு வைத்துள்ளார் என்றால் இவரது தமிழ்ப்பற்றைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மற்ற நடிகர்களும் தாய்மொழியாம் தமிழை மட்டும் நேசித்து அவர்களது திறமையை இங்கு மட்டும் காட்டினால் இன்னும் தமிழ்சினிமா பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இது வரும் இளைய தலைமுறைக்கும் ஒரு பாடமாக அமையும் என்றே சொல்லலாம்.