ஒரு படத்தின் ரிலீஸுக்காக அதிகாரி காலில் நெடுஞ்சாணாக விழுந்த விஜயகாந்த்… அவர் மனசுக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?
Vijayakanth: தமிழ் சினிமாவில் மட்டுமல்லா நிறைய நடிகர்கள் தங்கள் வேலை நடிப்பது மட்டும் தான். ரிலீஸ் ஆனா எனக்கு என்ன? என்ற ரீதியில் உலா வருவதை பார்க்க முடிகிறது. இதில் ரொம்பவே மாறுப்பட்டவர் விஜயகாந்த். அவர் செய்த ஒரு சம்பவம் தற்போது வெளியாகி இருக்கிறது.
கர்ம வள்ளல் விஜயகாந்த் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு நிறைய நல்லது செய்து இருக்கிறார். அப்போ அவரை நம்பியவர்களுக்கு எப்படி இருந்து இருப்பார். ஒரு வருடத்தில் 18 படம் வரை நடித்த பெருமை அவரையே சேரும். அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் அவர் மீது வைத்த நம்பிக்கை.
இதையும் படிங்க: இந்த பட்ஜெட்டுக்கு இப்படினா? 50கோடி கொடுத்தா தமிழில் ஒரு பாகுபாலியை காட்டிருவாங்க – சிவகார்த்திகேயன் பாராட்டிய படம்
அப்படி தன்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். இப்படி தான் ஒருமுறை ஊமை விழிகள் திரைப்படம் சென்சாரில் சிக்கி நிற்கிறது. அந்த படத்தின் இயக்குனர் அரவிந்த் ராஜ், ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார், வசனம் ஆபாவாணன். இவர்கள் மூவருமே திரைப்பட கல்லூரியில் இருந்து சினிமாவுக்கு வந்தனர். அவர்களின் முதல் படம் என்பதால் விஜயகாந்த் ஆரம்பத்தில் இருந்து துணை இருந்தாராம்.
அவர்களுக்கு திருப்தியாக எத்தனை ரீ டேக் போனாலும் அசராமல் நடித்து கொடுத்தாராம். படம் முடிந்து சென்சாருக்கு போனால் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்க பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்கள் மனம் வைத்து ரிலீஸ் செய்ய விட்டால் தான் படம் வெளியாகும் என்ற நிலை இருந்தது. அந்நடுவர் குழு தலைவரைக் கண்டு இறுதி வேண்டுகோள் வைக்கலாம் என படக்குழு செல்ல முடிவு எடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த வருசத்தோட மிகப்பெரிய உருட்டு இதுவா தான் இருக்கும்..! நிக்சன் நீங்களாம் திருந்த வாய்ப்பே இல்ல..!
ஒரு நடிகராக அவர் போகாமல் ரிலீஸுக்கு துணை நின்றார். இதை பார்த்த யாரும் யோசிப்பார்களா? அந்த நடுவரே மனம் வைத்து படத்தினை உடனே ரிலீஸ் செய்ய வேலைகளையும் செய்து கொடுத்தார். பல நாட்கள் கழித்து ரிலீஸ் ஆன ஊமை விழிகள் இன்னமும் ட்ரெண்ட் செட்டர் படம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படத்தினை தொடர்ந்து தான் திரைப்பட கல்லூரியில் இருந்து பலர் சினிமாவுக்கு வந்தனர்.