50 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ரஜினி. ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்ன கொண்டாடப்படும் இவர் பல வருட அனுபவங்களை பெற்றிருந்தாலும் அவ்வப்போது தோல்விப்படங்களையும் கொடுத்துவிடுகிறார். அவரின் பாபா, லிங்கா, குசேலன், தர்பார் அண்ணாத்த, வேட்டையன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
யானைக்கும் அடி சறுக்கும் என சொல்வது போல ரஜினியின் கணிப்பு சில முறை தவறியும் இருக்கிறது. அதேநேரம் ஒரு தோல்வி வந்தாலும் அடுத்த படமே சூப்பர் ஹிட் கொடுத்து தன்னுடைய இடம் அப்படியேதான் இருக்கும் என காட்டிவிடுவார் ரஜினி. இந்நிலையில், ஒரு கதையையும், இயக்குனதையும் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மற்ற நடிகர்கள் ரஜினியிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என சில ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கு உதாரணமாக அவர்கள் சொல்வது என்னவெனில் காலா படத்தில் பா.ரஞ்சித் அவரின் அரசியலுக்காக தன்னை பயன்படுத்திக் கொண்டார் என்பது தெரிந்ததும் அதன்பின் ரஞ்சித் படத்தில் ரஜினி நடிக்கவில்லை.. அண்ணாத்த படம் ஓடாததால் சிறுத்தை சிவாவை தன் பக்கம் சேர்க்கவில்லை. தர்பார் ஓடாமல் போனதால் முருகதாஸையும் கழட்டிவிட்டார்.. கூலி படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததால் கமலுடன் இணைந்து தான் நடிக்கும் படத்திலிருந்து லோகேஷையும் தூக்கிவிட்டார்.
ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என மாரி சொல்வராஜ் சில வருடங்களாக முயன்று வருகிறார். ஆனால் அவர் படங்களில் சாதிய பிரச்சனை அதிகமாக இருப்பதால் அவரை தன் பக்கம் சேர்க்கவில்லை. 75 வயதை கடந்தும் இன்னும் ட்ரெண்டில் இருக்க வேண்டுமென சிபி சக்கரவர்த்தி போன்ற இயக்குனரை தேர்ந்தெடுக்கிறார். ரஜினியை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற ஹீரோக்களை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன் என சொல்லி நம்பவைத்து அவரை சில மாதங்கள் காத்திருக்க வைத்து அதன்பின் அவரை கழட்டி விட்டார் ரஜினி. இதே டான் பட சிபி சக்கரவர்த்தியை கூப்பிட்டு பேசி லைக்கா தயாரிப்பில் ரஜினி ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரையும் ரஜினி கழட்டி விட்டார். தற்போது அதே சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையை டிக் அடித்திருக்கிறார் ரஜினி.
