OTTயில் புதிய பிக் பாஸ்.?! உங்கள் அபிமான நட்சத்திரங்களோடு,! யாருனு சொல்லுங்க பாப்போம்.!
தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த பிக்பாஸ் போட்டி நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனை எட்டியுள்ளது. ஐந்தாவது சீசன் வெற்றியாளர் யார் என்று இன்று இரவு நமக்கு தெரிந்துவிடும்.
சமூக வலைதளங்களில் வந்த தகவலின்படி வெற்றியாளர் ராஜு தான் என ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இன்று இரவு அது உறுதியாகிவிடும் என நமபபடுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை OTTகாக ஹாட்ஸ்டார் தயாரிக்க உள்ளதாம். அதில் இதுவரை பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமான பிக்பாஸ் ஓவியா, ஜூலி, ஆரவ் போன்ற பல பிக்பாஸ் போட்டி பிரபலங்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்களாம். அதற்கான தொடக்கக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
விரைவில் OTT பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கும் உலக நாயகன் கமல்ஹாசன்தான் நிகழ்ச்சி தொகுப்பாளரா அல்லது வேறு யாரும் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.