நடிகர்களுக்கு ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனங்கள்!.. இனிமே 100 கோடிலாம் சம்பளமா கேட்க முடியாது!..

by சிவா |
ajith vijay
X

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்துவந்த கருப்பு வெள்ளை காலங்களில் சில ஆயிரங்களாக இருந்த நடிகர்களின் சம்பளம் லட்சமாக மாறவே பல வருடங்கள் ஆனது. அவர்களும் தயாரிப்பாளர்களின் நிலையை புரிந்து கொண்டு அதிகம் பேரம் பேசாமல் சம்பளத்தை வாங்கிகொண்டு நடித்தனர். ரஜினி ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிக்க துவங்கி 3 வருடங்கள் கழித்துதான் ஒரு லட்சம் சம்பளமாக வாங்கினார். அதற்கு இடையில் அவர் 30 படங்கள் வரை நடித்திருந்தார்.

ஆனால், இப்போதெல்லாம் நடிகர்களின் சம்பளங்கள் பல கோடிகளாக இருக்கிறது. சின்ன நடிகர்களின் சம்பளங்கள் சில கோடிகள் எனில் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் சம்பளம் ரூ.100 கோடியை தொட்டுள்ளது. கடந்த 5 வருடங்களில்தான் நடிகர்களின் சம்பளம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒரு படம் ஹிட் அடித்துவிட்டாலே சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள்.

இதையும் படிங்க: முருகதாஸ் படத்தில் விஜய் பட வில்லன்!. அவர்கிட்ட அடி தாங்குவாரா நம்ம எஸ்.கே?!..

ஹீரோக்களின் கால்ஷீட் வேண்டும் என்பதற்காக சில தயாரிப்பாளர்கள் அதிக சம்பளத்தை கொடுக்க முன்வருவது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் சினிமாவின் வியாபாரம் இப்போது பல தளங்களிலும் அதிகரித்துள்ளது ஒரு முக்கிய காரணம். இதில் தயாரிப்பாளருக்கு பெரும் சந்தோஷத்தை கொடுப்பது ஓடிடி நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானம்தான்.

ott

விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் ஓடிடி உரிமைகள் மட்டும் பல கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. எனவே, அவற்றை அப்படியே வாங்கி நடிகர்களுக்கு சம்பளமாக தயாரிப்பாளர்கள் கொடுத்து வருகிறார்கள். அது இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி உரிமை, இசை வெளியீட்டு உரிமை, தியேட்டர் மூலம் கிடைக்கும் வருமானம், தொலைக்காட்சி உரிமை, வெளிநாடுகளில் வசூலாகும் தொகை என பல வகைகளிலும் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வருகிறது.

இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!. லால் சலாமில் பஞ்சாயத்து கிளப்பும் விஷ்ணு விஷால்.

அந்த தைரியத்தில்தான் தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு சம்பளத்தை கொட்டி கொடுக்கிறார்கள். ஆனால், இப்போது ஓடிடி நிறுவனங்கள் சுதாரிக்க துவங்கிவிட்டது. இனிமேல் இவ்வளவு விலை கொடுத்து படங்களை வாங்க வேண்டாம் என அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ தமிழ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே, பெரிய ஹீரோக்களுக்கு அவர்கள் கேட்கும் சம்பளத்தை இனிமேல் தயாரிப்பாளரால் கொடுக்க முடியாது. அதேநேரம். சம்பளத்தை உயர்த்தி வாங்கி பழகிவிட்டால் நடிகர்களும் அதை குறைக்கவே மாட்டார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: 10 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட்.. 40 கோடியில் பங்களா!.. சொல்லி அடித்த அட்லீ!..

Next Story