Connect with us

Cinema News

ஓடிடியில் முட்டிக்கொள்ளும் சதீஷ் vs நானி.. ஹாய் நன்னாவா? கான்ஜுரிங் கண்ணப்பன்? உங்க சாய்ஸ் என்ன?

OTT Release: தமிழ் சினிமாவில் தியேட்டருக்கு இணையாக பிரபலமடைந்து இருக்கும் ஓடிடி. வாரா வாரம் குறிப்பிட்ட ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்தின் லிஸ்ட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆக இருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நானி, மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஹாய் நன்னா. ஷௌரியவ் இயக்கியுள்ளார். ஹாய் நன்னா டிசம்பர் 7ந் தேதி போன வருடம் ரிலீஸ் ஆகியது. பாசிட்டிவ் ரீச்சை கொடுத்த இப்படம் உலகளவில் ₹75 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: நான் அவர் கூட இருந்திருந்தா கேப்டனை எப்படி பார்த்திருப்பீங்க தெரியுமா? மன்சூர் அலிகான் சொன்னத கேளுங்க

நாளை ஜனவரி5ல் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்து, சதீஷ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். நாசர் , ஆனந்தராஜ் , சரண்யா பொன்வண்ணன் , வி.டி.வி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.

இப்படமும் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. தம்பி ராமையா நடித்த லில்லிராணி நாளை ஆஹா தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. பிரபல இந்தி வெப் சீரிஸ் குபிக்கிள்ஸின் சீசன் 3 நாளை சோனி லைவ்வில் ரிலீஸ் ஆகும். அதை போல காலிங் சகாஸ்ரா என்ற டப்பிங் திரைப்படமும் தமிழில் ப்ரைமில் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரு செல்ஃபியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை – நிவாரணம் கொடுக்க வந்த விஜய்க்கு எதிராக திரும்பிய சம்பவம்

google news
Continue Reading

More in Cinema News

To Top