நடிகை ஓவியா பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். ஓவியா கேரக்டருக்கும் மாஸுக்கும் அவர் தான் தலைவி என்றும் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஆனால், பிக் பாஸுக்கு பிறகும் அவர் நடித்த படங்களை பார்க்க அவரது ஆர்மியினரே விரும்பாத நிலையில், ஆள் அட்ரஸே தெரியாமல் அந்த அம்மா காணாமல் போய் விட்டார்.
சமீபத்தில் வெப்சீரிஸான சிவிங்கம் என்கிற ஒன்றில் நடித்து அதனை வெறும் யூடியூப் சேனலில் ரிலீஸ் செய்தும் கூட ஒருத்தரும் பார்க்கவில்லை. குடி போதைக்கு அடிமையான நிலையில், தான் ஓவியா தனது மார்க்கெட்டையே இழந்து விட்டதாக பலரும் விமர்சித்து வந்த நிலையில், அவர் அளிக்கும் பேட்டிகளிலும் அது பற்றி வெளிப்படையாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜி கன்னத்தில் பளாரென அறைந்த நடிகை!.. மனுஷனுக்கு என்ன ஆச்சி தெரியுமா?…
மீண்டும் ஓவியா பிக் பாஸுக்கு வந்தால் ரசிகர்களை கவரலாம் என பலரும் அழைத்து வந்தாலும் விஜய் டிவியின் மற்ற ஷோக்களில் தலை காட்டும் ஓவியாவால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவே முடியவில்லை. அந்த அளவுக்கு பிக் பாஸ் பற்றி ட்விட்டர் பக்கத்தில் மோசமான கமெண்ட்டுகளை அவர் வெளியே வந்ததும் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு போட்டோவை போட்டு நானும் இங்கே தான் இருக்கேன் என தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சிக்னல் கொடுத்து வந்தாலும் எந்த பயனும் இல்லை.
இதையும் படிங்க: பேரு மட்டும் தமிழ்நாட்டின் தளபதி!.. வைக்கிறது பூரா இங்கிலீஷ் டைட்டில்.. தளபதி 68 டைட்டில் லீக்?..
தற்போது சிலை ஒன்றை கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுப்பது போல ஓவியா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், பாவம் ஓவியாவுக்கு கட்டிப்பிடிக்க கூட ஒரு பாய் ஃபிரெண்ட் இல்லையே என கிண்டல் செய்து வருகின்றனர்.
Lucky Bhaskar:…
தனது வருங்கால…
Rajinikanth: தமிழ்…
நடிகர் திலகம்…
நடிகர் பிரதீப்…