பிக் பாஸுக்கு வா வான்னு கூப்டுறாங்க!.. பட் ஐ எம் வெரி பிஸி!.. ஓவர் சீன் போடும் ஓவியா!..

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் இதயத்தை களவாண்ட களவாணி பட நடிகை ஓவியாவுக்கு எக்கச்சக்கமான மக்கள் ரசிகர்களாக மாற முதல் சீசன் பிக் பாஸ் தமிழ்நாடு முழுவதுமே பெரும் பேசு பொருளாக மாறியது.

பிக் பாஸ் வீட்டில் ஆரவ்வுடன் மருத்துவ முத்தமெல்லாம் கொடுத்து இந்த பூனையும் பால் குடிக்குமா என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இந்த பூனை பீரே குடிக்கும் என பிக் பாஸுக்கு பிறகு 90 எம்எல் படத்தில் அத்துமீறி சென்ற ஓவியா அந்த படத்துக்கு பிறகு ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விட்டார் என்றனர்.

இதையும் படிங்க: குடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீமுக்கு போயிடுவேன்!.. அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிடுவாங்க!.. உறைய வைத்த ஓவியா!..

இந்நிலையில், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போகிறேன் என நடிகை ஓவியா லேட்டஸ்ட் பேட்டியில் அதிரடியாக கூறி அனைத்து ஸ்லீப்பர் செல் ஆர்மியினரையும் தட்டி எழுப்பி உள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ஓவியா இந்த முறை 2 பிக் பாஸ் வீடுகளா? அது எப்படி ஒண்ணு சென்னையிலும், ஒண்ணு பாம்பேவிலும் இருக்குமா? என வெள்ளந்தியாக ஒன்றுமே தெரியாதது போல கேட்டது ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியது.

தோனிக்காக ஹிட் இயக்குநரை கழட்டி விட்ட ஹரிஷ் கல்யாண்!.. கல்யாணம் ஆனதும் கவினுக்கு அடித்த ஜாக்பாட்!..

நடிகை ஓவியாவுக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் டீமிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதாகவும் பிக் பாஸ் துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தன்னை அழைத்துள்ளனர். ஆனால், இன்னமும் நான் பங்கேற்கலாமா, இல்லையா என்பதை யோசிக்கவே என செம பில்டப் கொடுத்து பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் ஓடிடிக்கு ஓவியாவை அழைத்த நிலையில், வருகிறேன் என சொல்லிவிட்டு கமல் ப்ரோமோவில் எல்லாம் ஓவியாவை பற்றி பேசிய நிலையில், கடைசியில் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், மீண்டும் அவர் பிக் பாஸுக்கு வருவது சந்தேகம் தான் என்றும் விரைவில் வெளியாக உள்ள அவரது ஓடிடி வெப்சீரிஸான சிவிங்கத்திற்காக இப்படி பில்டப் புரமோஷன் செய்து வருகிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story