Connect with us

Cinema News

தோனிக்காக ஹிட் இயக்குநரை கழட்டி விட்ட ஹரிஷ் கல்யாண்!.. கல்யாணம் ஆனதும் கவினுக்கு அடித்த ஜாக்பாட்!..

சூப்பர் ஸ்டார், உலகநாயகன் என ஸ்டார் நட்சத்திரங்களை போல கெட்டப் போட்டு ஹரிஷ் கல்யாண் ‘ஸ்டார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், அந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகி விட்டார்.

அமலா பால் உடன் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பல படங்கள் வெளியானாலும், அவருக்கு எந்தவொரு படமும் கைகொடுக்கவில்லை.

இதையும் படிங்க: உயிருக்கும் உலகத்துக்கும் நயன்தாரா என்னம்மா சோறு ஊட்டுறாரு.. களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்!..

அதன் காரணமாக பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரவ், ஓவியா ஒரு பக்கம் ரொமான்ஸ் செய்ய இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாணும் ரைசா வில்சனும் பண்ண ரொமான்ஸும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்த சீசன் முடிந்த உடனே வெளியே வந்த ஹரிஷ் கல்யாணுக்கும் ரைசா வில்சனுக்கும் யுவன் சஙக்ர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் படம் கிடைத்தது. அந்த படத்தை அறிமுக இயக்குநர் எலன் இயக்கி இருந்தார். மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் பியார் பிரேமா காதல் அமைந்தது.

இதையும் படிங்க: இதெல்லாம் என்கிட்ட கேட்க கூடாது!. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் அவர்தான்!.. கடுப்பான மன்சூர் அலிகான்!..

அதன் பின்னர், மீண்டும் எலன் உடன் இணைந்து ஹரிஷ் கல்யாண் ஸ்டார் படத்தில் நடிக்கவிருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பின்னர் தோனி தயாரிப்பில் வெளியான எல்ஜிஎம் படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாணுக்கு அந்த படம் அட்டு ஃபிளாப் ஆகி விட்டது.

டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு திருமணம் செய்துக் கொண்ட நடிகர் கவின் அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா, எலன் கூட்டணியுடன் நடிக்கப் போகும் படத்தை சிமபலிக்காக கைகளில் ஸ்டார் போட்டுக் காட்டியுள்ளார். நாளை மாலை டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என கவின் அறிவித்துள்ள நிலையில், அதே ஸ்டார் படம் தானே என ரசிகர்கள் சட்டென கமெண்ட் பண்ணி வருகின்றனர். நாளை மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விடும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top