இதெல்லாம் என்கிட்ட கேட்க கூடாது!. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் அவர்தான்!.. கடுப்பான மன்சூர் அலிகான்!..

தமிழ் சினிமா, ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் கடந்த சில மாதங்களாகவே அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் சூப்பர்ஸ்டார் யார் என்பதுதான். நடிகர் ரஜினி 30 வருடங்களுக்கும் மேல் சூப்பர்ஸ்டார் பட்டத்தை கையில் வைத்திருக்கிறார். அவரின் படங்கள் வசூலை வாரி குவித்ததால் தயாரிப்பாளர்கள் அளித்த பட்டம் அது.

ஆனால், கடந்த சில வருடங்களாக ரஜினின் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் அடிப்பதில்லை. சந்திரமுகி 2-வுக்கு பின் அது போன்ற ஹிட் படத்தை ரஜினி கொடுக்கவில்லை. ஒருபக்கம் விஜயின் படங்கள் அதிக வசூலை பெறவே அவர்தான் சூப்பர்ஸ்டார் என சிலர் கொளுத்திப்போட அது பற்றி எரிந்தது.

இதையும் படிங்க: ரஜினிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது! தட்டிவிட்ட சக இயக்குனர்கள்… அட போங்க சார்!

விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக மோதிக்கொண்டனர். அதில் கடுப்பான ரஜினி ஜெயிலர் பட விழாவில் பருந்து - காக்கா கதையை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர். ஜெயிலர் படத்தை ஓடவிடமாட்டோம் என சொல்லி அப்படம் வெளியான போது அப்படத்திற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதுவரை 525 கோடி வரை வசூல் செய்து ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. எனவே, மீண்டும் நான்தான் சூப்பர்ஸ்டார் என ரஜினி நிரூபித்துவிட்டார். இந்நிலையில், ஒரு சினிமாவில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகானிடம் இந்த சூப்பர்ஸ்டார் விவகாரம் பற்றி கேள்வி கேட்டனர்.

இதையும் படிங்க: ஐடி விங்கை பலப்படுத்தும் விஜய்.. ஜவான் ஆடியோ லாஞ்சில் கண்டிப்பா சர்ப்ரைஸ் இருக்கு!..

இதற்கு பதில் சொன்ன அவர் ‘இந்த சூப்பர். சப்பறவன் எல்லாம் எங்கிட்ட கேட்காத!.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர் மட்டும்தான்’ என பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார். திரையுலகில் ரஜினி மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர் மன்சூர் அலிகான்.

ரஜினி எப்போதும் ஏழை பக்கம் நிற்கவே மாட்டார்.. யாருக்கும் எந்த நல்லதும் செய்ய மாட்டார். அவர் ஒரு சுயநலவாதி என தொடர்ந்து ரஜினி பற்றி ஊடகங்களில் அவரை பற்றி பல வருடங்களாக மன்சூர் அலிகான் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இவருக்காக தன் கொள்கையே மாற்றிய ரஜினிகாந்த்! பாலசந்தரை விட இவர் ஒசத்தியா?

 

Related Articles

Next Story