நீ வெளிய போயா!. கடுப்பாகி வடிவேலுவிடம் கத்திய பி.வாசு!.. படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு!...
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் பி.வாசு. சத்தியராஜ், பிரபு, ரஜினி, சரத்குமார், விஜயகாந்த் ஆகியோரை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் எடுத்த சின்னதம்பி திரைப்படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. ரஜினியை வைத்து பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.
தற்போது ‘சந்திரமுகி 2’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க ராதிகா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்திரமுகி படத்தில் ரஜினி - வடிவேல் காமெடி ரசிகர்களால் ரசிக்கப்பட்டதால் இந்த படத்திலும் பி.வாசு வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.
ஆனால், படப்பிடிப்பிற்கு சரியாக வராமல் வாசுவுக்கு தலைவலியை கொடுத்தார் வடிவேலு. ஏனெனில் அப்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வடிவேலு நடித்து வந்தார். எனவே, அந்த படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் வாசுவிடம் ‘எனக்கு வேற ஒரு படம் இருக்கு. இன்னைக்கு முடியாது. வேற ஒரு நாள் வந்து நடிச்சு கொடுக்கிறேன்’ என வடிவேலு சொல்ல பி.வாசுவோ ‘இன்னும் ஒரு நாள் நீங்கள் நடித்தால் போதும். தற்போது எடுக்கும் காட்சிகள் முடிந்துவிடும். இப்போது நீங்கள் போய்விட்டால் இந்த காட்சி பாதியிலேயே நிற்கும்’ என கூறியுள்ளார்.
ஆனால், வடிவேலுவோ ‘என்னால் நடிக்க முடியாது. சில நாட்கள் கழித்து வருகிறேன்’ என முரண்டுபிடிக்க, பி.வாசுவுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் கடுப்பான பி.வாசு ‘வெளியா போயா’ என கத்திவிட்டாராம். இதனால் அவமானத்தோடு அங்கிருந்து வடிவேல் வெளியேறிவிட்டார்.
வடிவேல் ஒன்றை முடிவெடுத்தால் அதை செய்தே தீருவார். இதனால், படப்பிடிப்பு பாதிக்கும்.. தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்றெல்லாம் நினைக்கவே மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.