என்னையும் பிரபுவையும் சண்டை போடவிட்டு வேடிக்கைப் பார்ப்பாரு ரஜினி!.. பி. வாசு இப்படி சொல்லிட்டாரே!..

by Saranya M |
என்னையும் பிரபுவையும் சண்டை போடவிட்டு வேடிக்கைப் பார்ப்பாரு ரஜினி!.. பி. வாசு இப்படி சொல்லிட்டாரே!..
X

சந்திரமுகி 2 படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரும் இயக்குநர் பி. வாசு பிரபுவுடன் சண்டை போடுவது குறித்தும் மனம் திறந்து பேசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சின்னதம்பி, மன்னன், சந்திரமுகி, குசேலன் என பல படங்களில் பி. வாசு இயக்கத்தில் பிரபு நடித்துள்ளார். சந்திரமுகி 2 படத்தில் பிரபு ஏன் நடிக்கவில்லை என்கிற கேள்விக்கு கான்ட்டிராக்டர் செந்தில்நாதன் ஒரே ஊரில் இருக்கமாட்டார்.

இதையும் படிங்க: சம்மந்தி லியோவில் பிசியா இருக்காரு!.. ஐஸ்வர்யாகிட்ட பிடிச்ச விஷயம் இதுதான்!.. தம்பி ராமைய்யா பளிச்!..

அவர் வேலை முடிந்து வேறு ஒரு ஊருக்குச் செல்லும் போது முருகேசன் வடிவேலுவிடம் இந்த வீட்டை பார்த்துக்கோ என்றோ, அல்லது விற்று விடுங்க என்றோ பொறுப்பை ஒப்படைத்து விட்டு கிளம்பிய நிலையில், இன்னொரு கோஷ்டிக்கு அந்த வீட்டை முருகேசன் விற்க என்ன பாடு படுகின்றார். அந்த குடும்பத்தினரால் மீண்டும் சந்திரமுகி எப்படி கிளம்புகிறது என்பது தான் சந்திரமுகி 2 படத்தின் கதையே எனக் கூறிவிட்டார் பி. வாசு.

கங்கா பார்வையில் வேட்டையனாக ரஜினி இருந்தார். ஆனால், உண்மையாகவே ஒரு வேட்டையன் எப்படி இருந்திருப்பார் என்கிற கதையைத்தான் இரண்டாம் பாகத்தின் பீரியட் போர்ஷனில் காட்டப் போகிறோம் என்று இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு எல்லாம் ஏன் இல்லை என்பதற்கு மொத்தமாகவே விளக்கம் கொடுத்து விட்டார் பி. வாசு.

இதையும் படிங்க: கதை கேட்கும் போதே புல்லரிக்குதே! சரத்குமாருக்காக ரஜினி சொன்ன கதை – புதுசா இருக்கே

சந்திரமுகி 2 இசை வெளியீட்டின் போது பிரபுவுக்கு உடல்நலம் சற்று சரியாக இல்லை. அதனால் தான் அவர் வரவில்லை. படம் ஆரம்பித்ததில் இருந்து ஆடியோ லாஞ்ச் வரை அனைத்து விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு நல்லா பண்ணுப்பா, நீ நல்லா பண்ணுனா பல பேருக்கு அது நல்லதா அமையும் என்பார்.

இசை வெளியீட்டு விழாவில் டீசன்ட்டா ஒயிட் ஷர்ட் போட்டுட்டு வந்த என்று இப்போவும் கலாட்டா செய்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாம் சொல்லவே வேண்டாம், எப்போதும் எனக்கும் பிரபுவுக்கும் ஸ்க்ரிப்ட்டில் தொடங்கி சீன், ஷாட், சமையல், சாப்பாடு என எல்லாவற்றிலும் சண்டை நடக்கும்.

எங்க ரெண்டு பேருக்கும் சண்டை ஸ்டார்ட் ஆனா, சந்தோஷமா அதை பார்த்து ரசிக்கிறது ரஜினி சார் தான் என பி. வாசு வெளிப்படையாக பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

Next Story