More
Categories: Cinema History Cinema News latest news

“சின்ன தம்பி படமெல்லாம் ஓடாது”… விநியோகஸ்தருக்கு ஆப்பு வைத்த இயக்குனர்… அடப்பாவமே!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் பி.வாசு. “நடிகன்”, “மன்னன்”, “உழைப்பாளி”, “சந்திரமுகி” போன்ற தமிழ் சினிமாவின் பல முக்கிய வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இவர்.

P Vasu

வாசுபாரதி

Advertising
Advertising

இயக்குனர் பி.வாசு, சந்தான பாரதி ஆகியோர் பிரபல இயக்குனரான சி.வி.ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தனர். இருவரும் இணைந்து “பன்னீர் புஷ்பங்கள்”, “மது மலர்”, “மெல்ல பேசுங்கள்”, “நீதியின் நிழல்” போன்ற திரைப்படங்களை இயக்கினார்கள். இவ்வாறு சில திரைப்படங்களை இணைந்து இயக்கிய நண்பர்கள் ஒரு கட்டத்தில் தனி தனியாக திரைப்படங்களை இயக்கலாம் என முடிவு செய்தனர்.

P Vasu and Santhana Bharathi

இதனை தொடர்ந்து பி.வாசு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கினார். அதனை தொடர்ந்து தமிழில் அவர் தனியாக இயக்கிய முதல் திரைப்படமாக “என் தங்கச்சி படிச்சவ” என்ற திரைப்படம் அமைந்தது. இதனை தொடர்ந்து “பிள்ளைக்காக”, “பொன்மன செல்வன்”, “வாத்தியார் வீட்டுப் பிள்ளை” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.

சின்ன தம்பி

1991 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, கவுண்டமணி, ராதாராவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சின்ன தம்பி”. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்தான ஒரு சுவாரஸ்ய தகவலை மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

Chinna Thambi

அதாவது பி.வாசு “சின்ன தம்பி” திரைப்படத்தை படமாக்கிக்கொண்டிருந்த அதே சமயத்தில் “அதிகாரி” என்ற திரைப்படத்தையும் இயக்கிக்கொண்டிருந்தாராம். இந்த நிலையில் பி.வாசுவின் தம்பியும் விநியோகஸ்தருமான ஒருவர் பி.வாசுவிடம் “நான் உங்களது திரைப்படத்தை வெளியிடலாம் என நினைக்கிறேன். சின்ன தம்பி, அதிகாரி ஆகிய இரண்டு திரைப்படங்களில் எந்த படத்தை வாங்கலாம்?” என யோசனை கேட்டாராம்.

பி.வாசுவுக்கு “சின்ன தம்பி” திரைப்படத்தின் மேல் சுத்தமாக நம்பிக்கையே இல்லையாம். ஆதலால் தனது தம்பியிடம் “அதிகாரி” திரைப்படத்தை வாங்கி வெளியிடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் பி.வாசு எதிர்பார்க்காத வகையில் “சின்ன தம்பி” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. ஆனால் “அதிகாரி” படுதோல்வி அடைந்ததாம்.

Adhikari movie poster

“சின்ன தம்பி” திரைப்படம் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வெளியான நிலையில், அருண் பாண்டியன் நடித்திருந்த “அதிகாரி” திரைப்படம் அதே ஆண்டு அதே ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts