பா.ரஞ்சித்தால் ஹெச்.வினோத்துக்கு வந்த சிக்கல்… சைக்கிள் கேப்ல பெரிய நடிகரின் வாய்ப்பை கவ்விட்டு போயிட்டாரே!!

by Arun Prasad |
Pa.Ranjith and H.Vinoth
X

Pa.Ranjith and H.Vinoth

பா.ரஞ்சித் தற்போது சீயான் விக்ரமை வைத்து “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

“தங்கலான்” திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதே வேளையில் ஹெச்.வினோத்தும் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

Pa.Ranjith

Pa.Ranjith

இந்த நிலையில் தற்போது இது குறித்து ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கமல்ஹாசன், ‘இந்தியன் 2” திரைப்படத்திற்கு பிறகு பா.ரஞ்சித்துடன் இணையவுள்ளாராம். ஆதலால் ஹெச்.வினோத்தின் புராஜக்ட்டில் கமல்ஹாசன் நடிக்கமுடியாத சூழல் உருவாகியுள்ளதாம்.

இதையும் படிங்க: சர்ச்சை சாமியாருக்கு ஜெயிலுக்குள் வைத்து கதை சொன்ன பிரபல இயக்குனர்… இவர்தான் புரொட்யூசரா?? என்னப்பா சொல்றீங்க!!

Kamal Haasan

Kamal Haasan

எனினும் இதனிடையே ஹெச்.வினோத் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அத்திரைப்படத்திற்குப் பிறகுதான் கமல்ஹாசனை வைத்து ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

H.Vinoth and Dhanush

H.Vinoth and Dhanush

“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத், யோகி பாபுவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்திருந்தது. அதே நேரத்தில் விஜய் சேதுபதியை வைத்தும் ஒரு திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது.

அதனை தொடர்ந்துதான் ஹெச்.வினோத் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வந்தது. ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹெச்.வினோத் தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வருகிறது.

Next Story