சந்தோஷ் நாராயணன் இசையமைத்த வேற லெவல் ஹிட் பாடல்… கேவலமா இருக்கு என்று அசிங்கப்படுத்திய பா. ரஞ்சித்!
சந்தோஷ் நாராயணன் தற்போது தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளராக உருமாறியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கிய “அட்டக்கத்தி” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், தனது முதல் திரைப்படத்திலேயே மிக சிறப்பான இசையை கொடுத்து இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
“அட்டகத்தி” திரைப்படத்தில் இடம்பெற்ற கானா பாடல்கள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் உண்மையான கானா பாடலுக்கு மிக நெருக்கமாக இருந்தது. “அட்டக்கத்தி” திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினார் சந்தோஷ் நாராயணன்.
சமீபத்தில் கூட தெலுங்கில் நானி நடித்த “தசரா” திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மைனர் வேட்டி கட்டி” என்ற பாடல் மிக பிரபலமாக பாடலாக அமைந்தது. தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் “பிராஜக்ட் கே” திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
அசிங்கப்படுத்திய பா.ரஞ்சித்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சந்தோஷ் நாராயணன் தனது முதல் படமான “அட்டகத்தி” திரைப்படத்தை குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது பா.ரஞ்சித் “அட்டகத்தி” திரைப்படத்தை உருவாக்க இருந்தபோது தயாரிப்பாளர் சிவி குமாரின் பரிந்துரையில் சந்தோஷ் நாராயணனை சந்தித்து இருக்கிறார். அப்போது “எனக்கு உன் கூட ஒர்க் பண்ணனும்ன்னு இஷ்டம் இல்லை. ஆனால் சிவி குமார் சொன்னதுனாலதான் நான் வந்தேன். எனக்கு இந்த படத்துல நிறையா கானா பாடல்கள் வேண்டும். வழக்கமா இருக்கிற சினிமா கானா பாட்டுலாம் வேண்டாம். நான் உன்னைய கானா பாடுறவங்ககிட்டலாம் கூப்பிட்டு போறேன்” என்று கூறி சந்தோஷ் நாராயணனை சென்னையில் பல இடங்களுக்கு அழைத்து சென்றாராம்.
பல வருடங்களாக சென்னையில் இருந்தும் இது போன்ற கானா பாடல்களை நாம் கேட்டதே இல்லையே என்று வியந்தாராம் சந்தோஷ் நாராயணன். அதன் பின் முதல் பாடலாக “ஆடி போனா ஆவணி” பாடலின் ட்யூனை போட்டுக்காட்டினாராம். அதை கேட்டதும் பா.ரஞ்சித் கைத்தட்டி சிரித்துக்கொண்டே “ரொம்ப கேவலமா இருக்கு” என்று சொன்னாராம்.
அதன் பின் கானா பாலாவை வரவழைத்து வரிகளை எழுதிய பின்பு அந்த பாடல் மிக அருமையாக வந்ததாம். அவ்வாறுதான் “ஆடி போனா ஆவணி” பாடல் உருவாகியிருக்கிறது. இப்பாடல் மிக பெரிய ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: 15 வயசுலையே சினிமாவில் ஹீரோயின் ஆன நடிகைகள்!. யார் யார் தெரியுமா?