ஜி.வி. பிரகாஷ் பஞ்சாயத்தை கூட்டப் போறாரு!.. தங்கலான் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பளிச் பேச்சு!..

by Saranya M |   ( Updated:2024-03-11 10:55:48  )
ஜி.வி. பிரகாஷ் பஞ்சாயத்தை கூட்டப் போறாரு!.. தங்கலான் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பளிச் பேச்சு!..
X

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் கடந்த ஆண்டு முதல் வரும் என எதிர்பார்த்து எதிர்பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு வருது, குடியரசு தினத்துக்கு வருது என சொல்லிக் கொண்டிருந்த நிலையில், சம்மருக்கு கூட வருமா என தெரியவில்லை.

இதையும் படிங்க: உலக நாயகனுக்கே விபூதி அடிக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு!.. இது எங்க போய் முடியுமோ!..

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷின் ரிபெல் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா. ரஞ்சித் தங்கலான் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் பெரிய சம்பவம் செய்துள்ளார் என்றும் அந்த படம் வந்தால் தெரியும் எனக் கூறியுள்ளார்.

படம் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். அவர் இசையமைக்கும் படங்கள் எல்லாம் நல்லாத்தான் ஓடுகின்றன. ஆனால், அவர் நடிக்கும் படங்கள் சொதப்பி வருகின்றன.

இதையும் படிங்க: மகன் வயது நடிகருடன் மஜா பண்ணும் பிரபல நடிகை!.. அந்த நடிகையோட சேர்ந்து சுத்துறாரே நயன்தாரா!..

இந்நிலையில், புரட்சியாளராக ஆக்‌ஷனில் அதகளம் பண்ணப் போகிறார் ஜி.வி. பிரகாஷ் என ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டு ரிபெல் படத்தில் எல்லோரும் பேசிய நிலையில், இந்த படத்தில் பேசப்படும் அரசியல் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என்றும் படம் நல்லா வந்திருக்கு என்றும் பா. ரஞ்சித் பாராட்டி உள்ளார்.

சமீபத்தில் அவர் தயாரிப்பில் ஊர்வசி நடித்து வெளியான ஜே. பேபி திரைப்படம் வியாபார ரீதியாக பெரிதாக போகவில்லை என்றும் இதுபோன்ற சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாவதே பெரிய சவாலாகவும் சாதனையாகவும் இருக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார்.

Next Story