குழந்தை குட்டியெல்லாம் ஆச்சு! அத வளர்க்கணும் - விரைவில் துவங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2...
சினிமாவை விட மக்களிடம் எளிதில் நெருங்குவது சின்னத்திரை தொடர்கள்தான். எந்த வீட்டில் போய் பார்த்தாலும் சீரியல் பார்க்காத குடும்பங்களை நாம் பார்க்க முடியாது. அந்தளவுக்கு சீரியல் குடும்பத்தில் ஒன்றாக மாறிவிட்டது.
சின்னத்திரை தொடர்களில் பெரும் போட்டியாக இருக்கும் சேனல்களில் சன் டிவியும் விஜய் டிவியும் தான் நிற்கின்றன. டிஆர்பியில் இந்த இரு சேனல்களுக்கும் இடையில் கடும் போட்டியே நிலவி வருகின்றது.
இதையும் படிங்க : இப்பவும் அஜித் இத செய்யலைனா அவ்ளோதான்! – பகீர் தகவலை சொன்ன பிரபலம்..
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது.
4 அண்ணன் தம்பிகளுக்கு இடைப்பட்ட பாசப் போராட்டம், குடும்பச் சூழ்நிலைகளை மையப்படுத்தியே இந்த சீரியல் ஒளிப்பரப்பப் பட்டு வருகிறது. ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் ஆகியோர் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : லட்டுல வச்சனு நினைச்சியா.. நட்டுல வச்சேண்டா.. ஜேசன் சஞ்சய் விஷயத்தில் அஜித்தின் ஆடுபுலி ஆட்டம்… ஷாக்கான கோலிவுட்!
மிக நீண்ட நாள்களாக ஓடி வரும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போது முடிவுக்கு வர இருக்கிறதாம். 5 ஆண்டுகளை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலை விஜய் டிவி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கூடிய சீக்கிரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகமும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டு வருகின்றன. இப்போது அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸும் இறங்கியுள்ளன.
இதையும் படிங்க : ஆடியோ விழாவிற்கு தேதியை லாக் செய்த ‘லியோ- சூப்பர்ஸ்டார் சர்ச்சை பற்றி விஜயின் முடிவு இதுதானாம்!..
அந்த சீரியலில் எல்லா மருமகளுக்கு குழந்தை பிறந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அந்த குழந்தைகள் வளர்ந்து அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய கதையாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.