---Advertisement---

Pandian stores2: ஆம்பளைங்கனாவே அப்பாவி தான் போல! தியாகியாக்கப்படும் தங்கமயில்! அடி வாங்க போகும் சரவணன்!

Published on: March 24, 2026
---Advertisement---

Pandian stores2: விஜய் தொலைக்காட்சியின் ஒரு தொடரில் எந்த வில்லத்தனமும் இல்லாமல் எதார்த்தமான காட்சிகளால் ஹிட் அடித்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். அதன் இரண்டாம் பாகம் தற்போது தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

முதல் சீசனில் அண்ணன் தம்பி பாச போராட்டத்தை சொல்லிய இந்த தொடரில் இந்த முறை அப்பா, மகன் பாசம் காட்டப்பட்டது. பாண்டியனாக ஸ்டாலினும், கோமதி என்ற கேரக்டரில் அவர் மனைவியாக நிரோஷாவும் களமிறங்கினார். இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. 

அந்த வகையில் மருமகள்களாக முதல் சீசன் ஹேமா, கதாநாயகி ஷோவில் வென்ற ஷாலினி, பிரபல நடிகை சரண்யா உள்ளே வந்தனர். இதில் எப்போதும் போல நல்ல மருமகள் கேரக்டரில் முதல் இருவரும் செட்டாகி விட சரண்யாவுக்கு கிட்டத்தட்ட முதலில் நெகட்டிவ் ரோலாக தான் இருந்தது. 

திருமணத்தில் படிப்பிலிருந்து நகை வரை எல்லாமே பொய் சொல்லி ஒரு கட்டத்தில் கணவரிடமே மாட்டிக்கொள்கிறார். ஆனாலும் தன் குட்டு உடைய கூடாது என தன்னை நல்லவளாக காட்டிக்கொள்ள கணவரை மாட்டிவிட தயங்காமல் இருக்கிறார். 

இதில் சரவணன் பொறுக்க முடியாமல் உண்மையை போட்டு உடைக்க அம்மா பேச்சை கேட்டு புகுந்த குடும்பத்தையே ஜெயிலில் வைக்கிறார். இப்படி பல சேட்டைகள் செய்தாலும் தற்போது அம்மணி கர்ப்பமாக அவரை தியாகி போல உருவகப்படுத்தி பிரச்சனையில் சிக்கிய சரவணனை ஆணாதிக்கவாதியாக காட்ட துவங்கிவிட்டனர்.

இப்பொழுது அப்பாவி போல பேசும் மயில் இதை முதலில் செய்து இருந்தால் கூட அவர் மீது ரசிகர்களுக்கு இரக்கம் வந்து இருக்கும். தற்போது சிந்து பைரவி சீரியல் போல இதிலும் ஹீரோயின் அடி வாங்கினால் கூட சந்தோஷம் அடையும் நிலையில் உள்ளனர் ரசிகர்கள். அப்பப்பா!