Pandiyrajan: பாக்கியராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் பாண்டியராஜன். உதவியாளராக இருக்கும்போதே பாக்கியராஜ் இயக்கிய பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பிரபுவை வைத்து கன்னிராசி என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் 1985ம் ஆண்டு வெளியானது. இதுதான் இவர் இயக்கிய முதல் திரைப்படம்.
அடுத்து அவர் இயக்கிய திரைப்படம்தான் ஆண் பாவம். இதில், பாண்டியனுடன் இணைந்து அவரும் நடித்திருப்பார். ஒரு சாதாரண கதையை நகைச்சுவை கலந்து தனது பாணியில் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: இவ்வளவு படங்களை தயாரிச்ச ஏவிஎம் நிறுவனம் அத மட்டும் பண்ணதே இல்லை!.. ஏன் தெரியுமா?..
அதன்பின் மனைவி ரெடி, நெத்தியடி, சுப்பிரமணிய சுவாமி, கோபாலா கோபாலா, டபுள்ஸ், கபடி கபடி ஆகிய திரைப்படங்களை இயக்கினார். மேலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியிருக்கிறார். 90களில் ஹீரோவாக வலம் வந்த பாண்டியரஜன் அதன்பின் குணச்சித்திர நடிகராக மாறினார்.
பாண்டிராஜ் இரண்டாவது இயக்கிய படம் ஆண்பாவம். இந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜா பின்னணி இசை அமைப்பதற்காக படத்தை பார்த்துள்ளார். படம் ஓடிய 10வது நி்மிடத்தில் பாண்டியராஜனை அழைத்து ‘நீ பாவலர் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த படம் பண்ணு’ என சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க: எந்திருக்கவே முடியலயாம்.. அவனுக்கு ஏழு பொண்டாட்டி கேட்குதாம்! சிரிப்பா போச்சு ஜெயம் ரவியின் நிலைமை
பாவலர் கிரியேசன்ஸ் என்பது இளையராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம். 10 நிமிடத்திலேயே பாண்டியராஜன் ஒரு திறமையான இயக்குனர் என்பதை இளையராஜா கண்டுபிடித்துவிட்டார். ஆனால், சில காரணங்களால் பாண்டியராஜன் அந்த படத்தை இயக்கவில்லை. ஆனாலும், பாக்கியராஜை போல காமெடி கலந்த கதைகளை அமைத்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாகவும் கலக்கியிருந்தார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இது பாண்டியராஜனா’ என வியந்து போனது குறிப்பிடத்தக்கது.