நடிகையின் உள்ளங்கையை சுரண்டிய இயக்குனர்... பரதேசி வேதிகாவுக்கு நடந்தது மட்டும்... எனக்கு நடந்தா?
ஹேமா கமிட்டி எல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு எல்லாம் விமர்சனம் வந்தது. மலையாளத்திரை உலகில் உச்ச நட்சத்திரம் என்று நினைத்துக் கொண்டு இருந்த அத்தனை நடிகர்களின் முகத்திரையையும் கிழித்து விட்டது.
Also read: எங்க அண்ணனுக்கு நாங்க செய்யாம எப்படி? கோட்க்கு முன் டாப் ஹிட் இயக்குனர்கள் செய்த விஷயம்…
தமிழ்ல அப்படி இல்லையா? ஆந்திரா நல்லாருக்குதான்னு கேட்டா அதை விட டபுள் மடங்கு இங்கு இருக்குதுன்னு ஒரு நடிகர் சொல்லி ஆதங்கப்பட்டாரு. அதைத் தாண்டி தொடர்ச்சியாக ஒவ்வொரு நடிகைகளும் பேட்டி கொடுத்தாங்க.
கேரளாவில் கேரவன்ல எனக்கு கேமரா வச்சி உடை மாற்றுவது எடுக்குறாங்கன்னு தெரிஞ்ச பிறகு ஓட்டல்ல உடை மாற்ற ஆரம்பிச்சேன். தமிழகத்துல அப்பா காலத்துல இருந்தே இருக்குதுன்னு ராதிகா சொன்னாங்க. அதே மாதிரி ஊர்வசி ஏன் மலையாளம் மலையாளம்னு சொல்றீங்க. தமிழ்லயும் இருக்குன்னு நாகரிகமா சொன்னாங்க.
ஸ்டார் வேல்யு உள்ள நடிகைகள் யாரும் இன்னும் துணிச்சலா பேசல. மற்ற நடிகைகள் வாயைத் திறந்து பேசறதுக்குக் காத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா இன்னொரு பக்கம் பயமும் இருக்கு. காரணம் ஓவர்நைட்ல பெரிய ஆளா ஆகிடலாம். லட்சங்கள்ல சம்பளம் வாங்கினவங்க கோடிகள்ல வாங்கலாம்.
காஜல் பசுபதி என்ற நடிகை பல படங்களில் நடித்துள்ளார். விவேக் ஒரு படத்தில் கல்யாணமே கட்ட மாட்டேன்னு சொல்வாரு. அவர் ஒரு இடத்தில் பெருமாள்னு சொல்வார். ஒரு லேடி கட்டுனா பெருமாளைத் தான் கட்டுவேன்னு சொல்லி விவேக்கை அந்தப் படத்தில் கட்டிக் கொள்வார். கோவிலில் ரவுடிகளைப் போட்டுப் பந்தாடுவார் காஜல் பசுபதி.
நிஜத்திலும் அவர் தைரியமானவர் தான். இவர் ஹேமா கமிட்டியை இந்திய சினிமா முழுவதும் கொண்டு வரணும்னு சொல்கிறார். பரதேசி படத்துல நான் நடிக்கிறேன். தேயிலை எஸ்டேட்ல துணை நடிகையாகவே நடிக்கிறேன். வேதிகாவை ஒரு பிரிட்டிஷ்காரன் அடிக்கிற மாதிரியான சீன்.
அவருக்கு அடிக்க வரல. இயக்குனர் பாலா மைக்கைக் கீழே வைத்து வேதிகாவை எப்படி அடிக்கணும்னு தெரியுமான்னு ஒரு அப்பாவி ஜூனியர் ஆர்டிஸ்டை அடித்துக் காட்டுகிறார். நான் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். நான் எழுந்து போகும்போது அருகில் இருந்த ஒரு நடிகை என்னை உட்கார வைத்தார்.
உன்னை அடிக்கலை அல்லவா என்றார். அதற்கு அந்த துணை நடிகை என்ன பாவம் பண்ணினார்? அந்த இடத்தில் நான் இருந்தால் அந்த அடி ஒண்ணு கூட விழாம நான் கிளம்பி போயிருப்பேன். இது மாதிரி பல வாய்ப்புகள் எனக்குப் போயிருக்கு என்றார். அது மட்டுமல்லாமல் எனக்குப் படவாய்ப்புகள் வரலை. ஆனா ஒரு முக்கிய டிவி சீரியல் வருது. அதை இயக்குபவர் பெரிய இயக்கனர். பேரு சொல்ல விரும்பலை.அவர் என்னை முதல்முறையா பார்க்கிறார்.
என் காமெடி, விவேக் உடன் நடிச்சது எல்லாம் நல்லாருக்குதுன்னு சொன்னார். அப்படியே அவர் கைகொடுக்குறாரு. அவர் என் உள்ளங்கையை மெதுவா சுரண்டுறாரு. அதுக்கு என்ன அர்த்தம்னா ரெடியா இருக்கேன். மேட்டருக்கு வர்றீயான்னு அர்த்தம்.
ஆனாலும் அவருக்கிட்ட இருந்து தப்பிச்சி தப்பிச்சி 10 நாள் சூட்டிங் நடிச்சி முடிச்சேன். நான் கோபப்பட்டு வெளியே வந்தேன்னா எனக்கு அந்த வாய்ப்பு போயிருக்கும். வருமானம் போயிடும்.
எனக்குக் காசில்ல. ஆனா நான் சமாளிச்சி வெளியே வந்தேன். இந்த சாமர்த்தியம் மத்தவங்களுக்கு உண்டா? இவர் பிக்பாஸ் சீசன் 1ல 70 நாள் கலக்குன நடிகை. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.