நடுராத்திரியில் ஒரு அமானுஷ்யம்… வடிவேலுவை நோக்கி நடந்து வந்த வெள்ளை உருவம்… கேட்கவே பயங்கரமா இருக்கே!!
1997 ஆம் ஆண்டு முரளி, மீனா, சங்கவி, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் சேரனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “பொற்காலம்”. இத்திரைப்படத்தை காஜா மைதீன் தயாரித்திருந்தார்.
“பொற்காலம்” திரைப்படம் முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. தேவா இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “தஞ்சாவூரு மண்ணு எடுத்து”, “சிங்கிச்சான் சிங்கிச்சான்", "ஊனம் ஊனம்” போன்ற பாடல்கள் காலத்துக்கும் ரசிக்கும்படியான பாடலாக அமைந்தது.
“பொற்காலம்” திரைப்படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்திருந்தாலும், அதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு அமானுஷ்ய சம்பவம் குறித்து தயாரிப்பாளர் காஜா மைதீன் தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது “பொற்காலம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினா பகுதியில் நடந்துகொண்டிருந்ததாம். அப்போது ஒரு நாள் நடு இரவு 1 மணி அளவில் படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலில் அமைந்திருந்த நீச்சல் குளத்தில் வடிவேலுவும் காஜா மைதீனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம்.
அப்போது தூரத்தில் ஒரு இருட்டில் இருந்து வெள்ளை உடை அணிந்து தலையில் மல்லிகைப் பூவுடன் ஒரு உருவம் இவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்ததாம். அந்த உருவத்தை பார்த்தவுடன் இவர்கள் பயத்தில் ஸ்தம்பித்துப்போய் உள்ளனர். அந்த உருவம் இவர்களின் அருகில் வந்தபோதுதான், அது வேறு யாரும் இல்லை, அத்திரைப்படத்தின் கதாநாயகியான மீனா என்று தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: குழந்தை பிறந்த அன்னைக்கும் ஷூட்டிங்கா?? ரஜினியின் டெடிகேஷன் லெவல் புல்லரிக்குதே!!
நடு இரவில் ஹோட்டல் அறையில் இருந்த தொலைப்பேசியில் கோளாறு ஏற்பட்டிருந்ததால், வரவேற்பறையில் இருந்த தொலைப்பேசியை பயன்படுத்திக்கொள்ள சென்றிருக்கிறார் மீனா. அவர் தொலைப்பேசியில் பேசி முடித்துவிட்டு திரும்பி வரும்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இச்சம்பவத்தை தனது பேட்டியில் மிகவும் நகைச்சுவையோடு பகிர்ந்திருந்தார் தயாரிப்பாளர் காஜா மைதீன்.