டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் பராசக்தி. 1960களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் மத்திய அரசுக்கு எதிராக அனல் பறக்கும் வசனங்களும் இடம் பெற்றிருந்தது.
Also Read
இந்நிலையில்தான் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் என்ன? நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்கிற விவரம் வெளியே தெரிய வந்திருக்கிறது. பராசக்தி திரைப்படம் மொத்தமாக 141 கோடியே 50 லட்சம் செலவில் உருவாகியிருக்கிறது.

இந்த 141 கோடியே 50 லட்சத்தில் சம்பளம் மட்டுமே 75 கோடியே 70 லட்சத்தை கொடுத்திருக்கிறார்கள். எப்படியெனில், சிவகார்த்திகேயனுக்கு 30 கோடி, சுதா கொங்கராவுக்கு 15 கோடி, ஜெயம் ரவிக்கு 16 கோடி, ஜிவி பிரகாசுக்கு 4 கோடி, அதர்வாவுக்கு 2 கோடி, ஸ்ரீலீலாவுக்கு ஒரு கோடி என சம்பளம் கொடுத்திருக்கிறார்கள்.
இதுபோக கேமரா மேன், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என மொத்த சம்பளம் 75 கோடியே 70 லட்சம் என்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் 120 நாட்கள் நடந்திருக்கிறது. சரித்தர கதை என்பதால் நிறைய செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். மேலும், பல காட்சிகளை இலங்கை மற்றும் வெளிநாடுகளிலும் எடுத்திருக்கிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கி அப்படம் 9ம் தேதி வெளியாவது கடினம் என்கிற நிலையில், பராசக்தி திரைப்படம் ஒன்பதாம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



