Parasakthi: ஆடியோ லான்ச்சில் கோட்டைவிட்ட எஸ்.கே!… அத மட்டும் செஞ்சிருந்தா!…

Published on: December 29, 2025
parasakthi
---Advertisement---

80,90களில் பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்றாகவே திரையரங்குகளில் வெளியாகும். தமிழகத்தில் உள்ள மொத்த தியேட்டர்களை எல்லோரும் பங்கிட்டு கொள்வார்கள். எல்லோரின் படங்களும் வசூலை அள்ளும். குறிப்பாக ரசிகர்களை கவரும் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடும். குறைந்தபட்சம் தியேட்டர்களில் 50 நாட்களாவது ஓட்டுவார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் ஒரு படம் 50 நாள் ஓடினாலே அது மிகப்பெரிய வெற்றிதான். படம் வெளியான ஒரு வாரத்திலேயே வசூலை எடுத்துவிட வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டது. எனவே ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகும் போது வேறு படங்களை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் யோசிக்கிறார்கள். குறிப்பாக ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாவது இல்லை. அப்படி வெளியானால் அந்த படங்களுக்கு தியேட்டர்களும் கிடைக்காது.. வசூலும் கிடைக்காது.

அதையும் மீறி படங்கள் வெளியானால் அதை தனிப்பட்ட போட்டியாகவே ரசிகர்கள் இப்போது பார்க்கிறார்கள். அப்படித்தான் ஜனநாயகன் Vs பராசக்தி போட்டி உருவாகியிருக்கிறது. ஜனநாயகன் படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாள் பராசக்தி படம் வெளியாகவுள்ளது. எனவே விஜயோடு சிவகார்த்திகேயன் மோதுகிறார் என்கிற பார்வை வந்துவிட்டது.

jananayagan

தன்னை அடுத்த விஜய் போல காட்டிக் கொள்கிறார் சிவகார்த்திகேயன். அதோடு, பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் திமுகவுக்கு நெருக்கமானவர்.. மேலும், படத்தை வெளியிடுவது ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ்.. எனவே அரசியல்ரீதியாக விஜய் மீது கோபத்தை ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடி கொடுக்கிறார் என்றெல்லாம் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.

ஒருபக்கம் ஜனநாயகன் படத்தோடு மோத முடிவெடுத்த சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் போட்டு பொளந்து வருகிறார்கள். ஒரு சிலரோ இரண்டு படங்களும் ஒரே நாளில் வந்தால் என்ன?.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் என்று சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்தான் ஆடியோ லான்ச் விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறது பராசக்தி படக்குழு.

ஜனநாயகம் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைகளில் இது தொடர்பான வீடியோக்கள்தான் ஓடிக்கொண்டிருந்தது.

அப்படியிருக்க பராசக்தி படத்தின் ஆடியோ லான்ச்சையும் பெரிய அளவில் நடத்தினால் மட்டுமே அது ஜனநாயகனுக்கு போட்டியாக அமையும். ஆனால் அப்படி நடக்கவில்லை. முதலில் பராசக்தி பட இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு வெளி விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டனர். அதில் நடந்திருந்தால் அதிக அளவில் ரசிகர்கள் கூடியிருப்பார்கள்.

ஆனால் அங்கே சில விஷயங்களை செய்ய முடியவில்லை என்பதால் சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கென்றே நேந்துவிட்டிருக்கும் சாய் ராம் இன்ஜினியரிங் காலேஜுக்கு மாற்றி இருக்கிறார்களாம். அங்கு ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பதால் பராசக்தி பட ஆடியோ லான்ச் பெரிய அளவில் பேசப்படாது என்கிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.