Parasakthi: பத்து நாள்ள பராசக்திக்கு பாயசத்த போட்டாங்க!.. 50 கோடி கூட வரலயே!….

Published on: January 20, 2026
parasakthi
---Advertisement---

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்ற சுதா கொங்கரா இயக்கிய ஒரு சரித்திர திரைப்படம்தான் பராசக்தி. 1960களில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். விஜயின் ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி படம் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கையில் சிக்கியதால் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. எனவே ஷோலோவாக வெளியானது பராசக்தி.

ஒருபக்கம் விஜய் ரசிகர் இந்த படத்துக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப ஒரு பக்கம் படம் பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்களை சொல்ல படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. முதல் இரண்டு நாட்களில் உலக அளவில் 50 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தாலும் அதன்பின் அடுத்த 8 நாட்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால் முதல் இரண்டு நாள் 50 கோடி என்று தயாரிப்பாளர் சொன்னது பொய்யான தகவல்தான் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் பராசக்தி திரைப்படம் 49.45 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சில இணையதளங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கிறது.