பார்த்திபன் சொன்ன பலே ஐடியா… விறுவிறுவென வேலையை தொடங்கும் “பொன்னியின் செல்வன்” படக்குழு… என்னவா இருக்கும்!
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெறும் வெற்றிபெற்றது. கிட்டத்தட்ட ரூ.500 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. முதல் பாகத்தில் பல முடிச்சுக்களை போட்டு வைத்திருந்தார் மணிரத்னம். குறிப்பாக கிளைமேக்ஸில் ஊமை ராணி என்ற கதாப்பாத்திரம் ஐஸ்வர்யா ராய் என்னும்போது ஊமை ராணிக்கும் நந்தினிக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதற்கான விடையாக இரண்டாம் பாகம் நிச்சயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த பார்த்திபன் படக்குழுவினருக்கு ஒரு ஐடியாவை கூறியிருக்கிறாராம்.
அதாவது “பொன்னியின் செல்வன்” இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கும் இந்த தருணத்தில் தமிழகத்தின் சில முக்கிய இடங்களில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தை மீண்டும் திரையிடலாம் என பார்த்திபன் படக்குழுவினருக்கு ஐடியா கொடுத்துள்ளாராம். இந்த ஐடியா மிகவும் பிடித்துப்போக முதல் பாகத்தை தமிழகத்தில் சில திரையரங்குகளில் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எப்போதும் ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருகிறது என்றால் மக்கள் அந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடர்ச்சியை மறந்துவிடக்கூடாது என்பதற்காக முதல் பாகத்தை வெளியிடுவது வழக்கம்தான். ஆனால் ஹாலிவுட்டில்தான் இது பெரும்பாலும் வழக்கமாக இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது “பொன்னியின் செல்வன்” படக்குழு இந்த வழக்கத்தை கடைப்பிடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மணிமேகலை வெளியேறியதற்கு இதுதான் காரணமா?… விஜய் டிவி இப்படி ஒரு டிவிஸ்ட் வச்சிருக்காங்களே!!