எந்த சூழ்நிலையிலும் தனது கொள்கையை விட்டு கொடுக்காத பட்டுக்கோட்டையார்… அதனால் தவறிய முதல் வாய்ப்பு…
தமிழ் சினிமாவில் பட்டுகோட்டையார் என செல்லமாக அழைக்கப்படுபவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம். திரையுலகில் மிக குறைந்த காலம் வாழ்ந்த கவிஞர் இவர்தான். இவரது வாழ்க்கை பயணம் வெறும் 29 ஆண்டுகளே இருந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான கலைஞரை இழந்தது திரையுலகிற்கு பெரிய இழப்பு என்றுதான் கூற வேண்டும்.
சமூக சீர்திருத்த கருத்துகளை மையப்படுத்தி பாடல்களை எழுதுவதில் வல்லவர் மற்கும் இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் கூட. இவர் 1955ஆம் ஆண்டு வெளியான மகேஸ்வரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராய் அறிமுகமானார்.
இதையும் படிங்க:எங்க இருந்துப்பா வந்தீங்க… திருவிளையாடல் பட பாடலுக்குபின் இவ்வளவு அர்த்தங்களா!…
பின் அலாவுதீனும் அற்புத விளக்கும், கற்புகரசி, நாடோடி மன்னன் போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல் வரிகளை எம்.ஜி.ஆர் படங்கள் பலவற்றிலும் காணலாம். இவர் பொதுவாகவே தனது உணார்வுகளை கவிதைகளாக கொடுப்பதில் வல்லவர்.
ஒரு முறை தனது வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த பட்டுகோட்டையார் அருகில் உள்ள ஏரிக்கு பக்கத்தில் ஓய்வெடுத்துள்ளார். அப்போது அங்கு கெண்டை மீன்கள் துள்ளி கொண்டிருந்தது. தூரத்தில் அம்மீனை பிடிக்க தூண்டிலோடு மீனவன் வந்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அப்போது அவர் தனது எண்ணத்தை கவிதையாக வர்ணித்தார். அப்போது ஊரில் உள்ளவர்களின் அறிவுரையால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க:ரெக்கார்டிங் தியேட்டரில் ஆன் தி ஸ்பாட்டில் டியூனை மாற்றிய எம்.எஸ்.வி.. அந்த சூப்பர் ஹிட் பாட்டா!…
பல கஷ்டங்கள் தாண்டி இவருக்கு சென்னையில் முதல் வாய்ப்பு கிடைக்கின்றது. அப்போது சினிமா துறையை சேர்ந்த பிரபலம் ஒருவர் வந்துள்ளார். அவர் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர். அப்போது தனக்கு தெய்வத்தினை பற்றிய கவிதை எழுதித்தருமாறு கேட்டுள்ளார். பட்டுகோட்டையோ தெய்வ நம்பிக்கை இல்லாதவர்.
அப்போது பட்டுகோட்டையோ ஒரு பாடலை எழுதி கொடுத்துள்ளார். “நல்லாலுக்கு பொல்லாலுக்கும் நடுவில் இருக்கும் சாமி. நீ கல்லா போன காரணத்த எல்லாருக்கும் காமி” என்று எழுதி கொடுத்தாராம். இதை பார்த்த அந்த சினிமா பிரபலத்திற்கு முகத்தில் அறைந்தவாறு ஆகிவிட்டதாம். இப்பாடலை எழுதியதால் போனது அவரது முதல் வாய்ப்பும் கூடதான். இருந்தாலும் தான் தனது கொள்கையை விட்டு கொடுத்திருந்தால் இவர் தனது வாய்ப்பை நழுவ விடாமல் இருந்திருக்கலாம். ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும் தனது கொள்கையை விட்டு கொடுக்காதவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க:கண்ணதாசனுக்காக இசையமைப்பாளரை மாற்றிய எம்.ஜி.ஆர்.. அட அந்த படத்துக்கா!…
COPYRIGHT 2024
Powered By Blinkcms