சந்திரபாபுவின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகர் திலகம்... இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா!..

தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகருக்குக் கிடைக்க வேண்டிய பட வாய்ப்பு இன்னொரு நடிகருக்கு போவதுண்டு. இது வழக்கமான விஷயம் தான். ஆனால் தட்டிப்பறித்த சம்பவங்களும் நடந்ததுண்டு. என்ன என்று பார்ப்போமா...

1960 ஜனவரி 20ல் பாவமன்னிப்பு படத்துக்கு பூஜை போட்டார்கள்;. இந்தப் படத்துக்கு ஏவிஎம் நிறுவனம் இயக்குனர் பீம்சிங்குடன் சேர்ந்து தயாரித்தது. அப்போது பீம்சிங் சந்திரபாபுவை வைத்து அப்துல்லா என்ற படத்தை இயக்கி வந்தார்.

கிட்டத்தட்ட 2000 அடி வரை படத்தை எடுத்து முடிச்சிட்டாங்க. அப்போது பீம்சிங் சரவணனை அழைத்து படத்தை எடுத்தவரை போட்டுக் காட்டினார். அது சந்திரபாபு எழுதிய கதை. இந்துவாக பிறந்த ஒருவன் முஸ்லிமால் வளர்க்கப்பட்டு கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்கிறான். எவ்வளவு பண்ணியும் படம் சரியாக வரவில்லை. மறுபடியும் ரீடேக் பண்ணனும்னு கொஞ்சம் வருத்தத்தோடு சொன்னாராம் பீம்சிங்.

அந்தக்கதையோ ஏவிஎம் சரவணனுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். அதை தந்தையிடம் சொல்லி இந்தப்படத்தைத் தயாரிக்கலாம் என்றாராம். உடனே மெய்யப்ப செட்டியார் பீம்சிங்குடன் சுமூகமாகப் பேசி தயாரிக்க முன்வந்தாராம். உடனே படத்துக்கான திரைக்கதையை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் பீம்சிங். அந்த சமயத்தில் சிவாஜியின் தம்பி சண்முகத்தின் கல்யாணம் நடந்தது.

Beemsingh, Sivaji

Beemsingh, Sivaji

அந்தக் கல்யாணத்துல அப்துல்லா கதை எப்படி வந்துருக்கு என சரவணன் பீம்சிங்கிடம் கேட்டார். ரொம்ப பிரமாதமா வந்துருக்கு. ஹீரோ கேரக்டர் நல்லா வந்துருக்கு. அதை சந்திரபாபு தாங்க மாட்டார். சிவாஜியை நடிக்க வைக்கலாம்னு சொன்னார். முதலில் நாலரை லட்சமாக இருந்த பட்ஜெட் சிவாஜி என்றதும் பத்தரை லட்சமானது. செட்டியாரும் அதற்கு ஒப்புக்கொண்டாராம்.

ஆனால் கதை சந்திரபாபு உடையது. அதில் சிவாஜி நடிக்க சம்மதிப்பாரா என்று கேள்வி எழுந்தது. அதற்கு பீம்சிங் அவரிடம் ஏற்கனவே சொல்லி விட்டேன் என்றாராம். படத்தில் தாயார் வேடத்தில் நடித்த கண்ணாம்பாள் இறந்து விடுகிறார். இதனால் படம் ரிலீஸாவதில் காலதாமதமாகிறது.

மறுபடியும் எம்.வி.ராஜம்மாளை வைத்து படம் எடுத்தார்களாம். படத்தோட பாடல்கள் வெளியானதும் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. படம் வெளியானதும் பாடல் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படமும் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it