உனக்காம்மா இப்படி?.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் பவானி....
தெலுங்கில் சில சீரியல்களிலும், தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பவானி ரெட்டி.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். நடந்து முடித பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். தன்னுடைய 21 வயதில் மாடலாக தனது வாழ்க்கைத் துவங்கினார் பவானி. தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 201 ல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், சில காரணங்களால் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அதன்பின் பவானி ரெட்டி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதோடு, அவர் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர். ஆனால், அதில் உண்மையில்லை என விளக்கமளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்ச்சியின் இறுதி வரை வந்து வெளியேறினார்.
இதையும் படிங்க : என்ன தெரியுதோ பாத்துக்கோ!…கொஞ்சம் மட்டும் மூடி எல்லாத்தையும் காட்டிய அமலாபால்….
இந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ‘எனக்கு சாதாரண அறிகுறிகளுடன் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் திரும்ப வருவேன்’ என பதிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட ரசிகர்கள் அவர் நலமடைய பிரார்த்திப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.