காதலருக்கே தெரியாமல் பாவனி பார்த்த வேலை!.. ரொம்ப கெட்ட பழக்கம் என எச்சரித்த அமீர்!..

Published on: November 22, 2023
---Advertisement---

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியேவும் காதலர்களாக இருக்கும் ஒரே ஜோடி என்றால் அது அமீர் மற்றும் பாவனி ரெட்டி தான். இந்நிலையில், காதலருக்கே தெரியாமல் பாவனி பார்த்த வேலையை குறிப்பிட்டு அமீர் போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக அமீர் மற்றும் பாவனி கலந்து கொண்டனர். வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும் நுழையாமல் ஏற்கனவே கணவரை இழந்த வருத்தத்தில் இருந்த பாவனியின் மனதிற்குள்ளும் வைல்டு கார்ட் என்ட்ரியாக வாழ்க்கைக்குள்ளே நுழைந்து விட்டார்.

இதையும் படிங்க: தனுஷின் வா அசுரா வைப்ஸ்!.. கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் பாட்டு எப்படி இருக்கு?..

அமீரின் தங்கை ஐஷுவும் இந்த சீசனில் நடனக் கலைஞர் நிக்சனுடன் அதே போல மிங்கிளாகவே பிளான் போட்டாரா? என்றும் கேள்விகள் கிளம்பின. ஆனால், ஐஷு வெளியே வந்ததும் அனைத்துக்கும் மன்னிப்பு கேட்டு ஆளே மாறிவிட்டார்.

ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் லவ் கன்டென்ட்டாக செய்யாமல் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் ஜோடி போட்டு ஆட ஆரம்பித்த அமீர் மற்றும் பாவனி அஜித்தின் துணிவு படத்திலேயே திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாகவும் நடித்தனர். ஒரே வீட்டுக்குள் திருமணம் ஆகாமல் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். சீக்கிரமே சினிமாவில் பெரிதாக சாதித்து விட்டு திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலய்யா பண்ண பலான வேலை.. பற்ற வைத்த விசித்ரா.. கமல் இப்போ வாய்ஸ் கொடுப்பாரா?

இந்நிலையில், இருவரும் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் க்ளிக் போட்டோக்களை நடிகை பாவனி மட்டும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில், “very bad habit at least collab Panni irukula @pavani9_reddy it’s ok.” என எமோஜியில் முத்த மழை பொழிந்துள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.