கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!.. கறாராக மறுத்த பெப்சி உமா!.. என்ன படம் தெரியுமா?..

Published on: April 19, 2023
pepsi uma
---Advertisement---

தற்போதெல்லாம் டிவி ஆங்கர் பலரும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டனர். ரசிகர்களிடம் பிரபலமான ஆங்கர் எல்லோருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் வருகிறது. சிவகார்த்திகேயன் கூட சினிமாவில் அப்படித்தான் வந்தார். இன்னும் சொல்லப்போனால் அதை துவங்கி வைத்தவரே இவர்தான். அவருக்கு பின் விஜய் டிவியிலிருந்து டிடி, கவின், மா,கா.பா. ஆனந்த் என பலரும் சினிமாவில் நடித்துள்ளனர்.

அதேபோல், சன் டிவியில் பல வருடங்களுக்கு முன்பே ஆங்கராக இருந்தவர் பெப்சி உமா. தொலைப்பேசி வழியாக ரசிகர்கள் இவரிடம் பேசி அவர்களுக்கு பிடித்த பாடலை கேட்டால் அது ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை சுமார் 16 வருடங்கள் நடத்தி பெப்சி உமா. இதனால் இவர் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து இவருக்கும் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது. ரஜினியின் முத்து படத்தில் வந்த வாய்ப்பை மறுத்தார். அதேபோல், மணிரத்னம் அழைத்தும் உமா சம்மதம் கூறவில்லை.

இந்நிலையில், கமல்ஹாசன் படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்து அவர் மறுத்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. அன்பே சிவம் படத்தில் நடிக்கத்தான் உமாவை அழைத்தனர். இது கமல் படம்.. கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என எவ்வளவு சொல்லியும் ‘சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை’ என உமா மறுத்துவிட்டாராம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.