அட்லிக்கு அசிங்கமா போகுமே!.. ‘பேரரசு’ படத்தை ஜவானுக்கு முன்பே ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரின் உதவியாளர்தான் அட்லீ. ஆர்யா - நயன்தாராவை வைத்து உருவான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.
ஏற்கனவே ஹிட் அடித்த தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி திரைப்படங்களின் கதையை சுட்டு அட்லி படம் எடுக்கிறார் என்கிற புகார் பல வருடங்களாகவே அட்லி மீது இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தை சுட்டு, பட்டி டிங்கரிங் செய்து அவர் எடுத்த படம்தான் ராஜராணி.
இதையும் படிங்க: ‘ஜவான்’ படத்தில் வில்லனாக களமிறங்கும் ‘லியோ’ பட நடிகர்!.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அட்லீ..
அதேபோல், விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தை வைத்து தெறி படத்தை எடுத்தார். அதேபோல், ரஜினியின் மூன்று முகம் மற்றும் கமலின் அபூர்வ சகோதரர்கள் ஆகிய படங்களை உல்ட்டா செய்துதான் மெர்சல் படத்தை எடுத்தார். இந்த படத்தை பார்த்த கமல் அட்லியை வீட்டிற்கு அழைத்து தனக்கு பின்னால் அபூர்வ சகோதரர்கள் பட பேனரை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அட்லியை அனுப்பிவிட்டார்.
அவர் எடுத்த பிகில் படம் கூட ஷாருக்கான் நடித்த ‘சக்தே இண்டியா’ படத்தின் உல்ட்டாதான். மேலும், சில ஆங்கில படங்களின் காட்சிகள் கூட பிகில் படத்தில் இருந்தது. இப்போது அதே ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விஜயகாந்த் நடித்து 2006ம் வருடம் வெளிவந்த பேரரசு படத்தின் உல்டா என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஜவான் குழு செய்த வேலை தான் இது… இப்ப என்னால எதுவுமே சொல்ல முடியாது… அடம் பிடித்த அட்லீ…
இதைத்தொடர்ந்து பேரரசு படத்தின் உரிமையை வைத்திருக்கும் மாணிக்கம் நாராயணன் அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்தார். ஆனால், இது வேறு கதை என அட்லி கதை சொன்னார். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஜவான் படம் வெளியாகும் முன்பே அதாவது அக்டோபர் 25ம் தேதியே பேரரசு படத்தை ரீ ரிலீஸ் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளாராம். இது அட்லிக்கு வைக்கும் செக்-ஆக பார்க்கப்படுகிறது. இப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஜவான் இந்த படத்தின் காப்பிதான் என தெரியட்டும் என அவர்கள் கணக்கு போடுகிறார்கள்.
இதுவரை எந்த தயாரிப்பாளரும் அட்லிக்கு இப்படி செக் வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அட்லீக்கு தொடர்ந்து ஹெல்ப் செய்யும் தளபதி… கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலுமா? ஓவரு சார்!