Connect with us

Cinema News

அட்லீக்கு தொடர்ந்து ஹெல்ப் செய்யும் தளபதி… கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலுமா? ஓவரு சார்!

தமிழ் சினிமாவில் முதல் சில படங்களிலேயே புகழ் வெளிச்சத்துக்கு வந்த சில இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான எல்லா படங்களுமே நல்ல வசூல் வெற்றியினை பெற்றாலும் விமர்சன ரீதியாக தமிழ் படங்களின் காப்பி எனக் கூறப்படுகிறது.

கோலிவுட்டில் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபடமாக அமைந்தது. ஆனால் படம் மௌனராகம் படத்தின் காப்பி என கூறப்பட்டது. இதற்கெல்லாம் அசரவில்லை அட்லீ. அடுத்த படமே அவருக்கு மிகப்பெரிய ஸ்டாரான தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: கேப்டனை தவிர யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாத ஆளு! சீண்டி விட்டுட்டாங்கப்பா

அட்லீ மீது சாதாரணமாகவே விஜயிற்கு தனி பிரியம் எனக் கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் அட்லீ உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அங்கிருந்தே இருவருக்கும் ஒரு புரிதல் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: விக்ரம் தாண்டியாச்சி.. அடுத்து பொன்னியின் செல்வன்!. வசூலில் சக்கை போடு போடும் ஜெயிலர்…

பிகில் படத்தினை முடித்து விட்டு அட்லீக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மாஸ் கான்களில் ஒருவரான ஷாருக்கானை இயக்க இருப்பதாக அறிவித்தார். பலதரப்பட்ட போராட்டங்களுக்கு அப்படத்தின் எல்லா வேலைகளும் முடிந்தது. சமீபத்தில் தான் படத்தின் ரிலீஸ் தேதி, ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அட்லீ கேட்டுக்கொண்டதற்காக விஜய் இதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். சமீபத்தில் கூட அட்லீ பிறந்தநாள் நிகழ்ச்சியில் மூன்று பேரும் இருக்கும் புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top