Cinema News
விஜய்க்கு ஹிட் அடிச்ச ‘போக்கிரி’ அந்த கமல் படம்தான்!.. எவ்ளோ நேக்கா அடிக்கிறாங்க!..
சினிமாவில் சில ஃபார்முலாக்கள் இருக்கிறது. ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட், குடும்ப சித்திரம், திரில்லர் என எல்லா வகையான படங்களுக்கும் ஒரே ஃபார்முலாதான். வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு நடிகர்கள் நடித்தாலும் கதையின் அடிநாதம் ஒன்றாகவே இருக்கும்.
அதேபோல், ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்துவிட்டால் அதே மாதிரி கதையில் 100 படங்கள் வரும். உதாரணத்திற்கு அமீர் இயக்கிய பருத்திவீரன். தேனி பக்கம் தாடி வைத்துக்கொண்டு, மது அருந்தி கொண்டு, சண்டியராக, அலட்டலாக வலம் வரும் ஹீரோ கதாபாத்திரம். அந்த படம் ஹிட் அடிக்கவே அதே போன்ற வேடத்தில் பல ஹீரோக்களும் நடித்துவிட்டனர்.
இதையும் படிங்க: சூர்யா படத்தில் நேர்ந்த சோகம்!.. ரோட்டுல நின்னு கதறி அழுத சினேகன்!.. கை கொடுத்த அமீர்..
தெலுங்கில் ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அல்லு அர்ஜுன் அப்படி ஒரு வேடத்தில்தான் நடித்திருப்பார். காந்தாரா பட கதாநாயகனும் அப்படித்தான். அதேபோல்தான் தமிழ் சினிமாவில் போலீஸ் வேடமும். தங்கப்பதக்கம் சிவாஜிக்கும் சாமி விக்ரம் மற்றும் சிங்கம் சூர்யாவுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை. சிவாஜி போல வெறப்பான போலீஸ் வேடத்தில் பலரும் நடித்துவிட்டனர்.
கமல், அம்பிகா, சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து 1985ம் வருடம் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம்தான் ‘காக்கி சட்டை’. போலீஸ் ஆக வேண்டும் என கமல் முயற்சி செய்வார். ஆனால், அவரை நிராகரித்துவிடுவார்கள். எனவே, கோபத்தில் வில்லன் குரூப்பிடம் சேர்ந்துவிடுவார். பின்னர்தான் தெரியும். அவர் வில்லன்களிடம் சேர்ந்ததே அவர்களை பற்றி தெரிந்துகொள்ளதான். அதாவது, போலீஸ் சொல்லியே அந்த வேலையை செய்வார்.
இதையும் படிங்க: கமல் பண்ண தப்பை கரெக்ட் பண்ணும் தாணு!.. ரீ ரிலீஸில் கல்லா கட்டுமா ஆளவந்தான்?!..
இதை எங்கே பார்த்த மாதிரி இருக்கிறதா?.. போக்கிரி படத்தில் விஜயும் இதைத்தான் செய்வார். அவரின் கதாபாத்திரம் வேறுமாதிரி இருக்கும் அவ்வளவுதான். இதில் காமெடி என்னவெனில், போக்கிரி படமே தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படத்தின் ரீமேக்தான். அதாவது, கமல் படத்தின் கதை தெலுங்குக்கு போய் மகேஷ் பாபு நடித்து பின் அதேவேடத்தில் விஜய் தமிழில் நடித்தார்.
இதேபோல்தான், பார்த்திபனின் உள்ளே வெளியே படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் டெம்பர் என்கிற பெயரில் ஹிட் அடிக்க, தமிழில் விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ படமாக உருவானது. இந்த படத்திலும் பார்த்திபன் வில்லனாக நடித்திருந்தார். இதுதான் சினிமா.