Cinema History
அடிப்பட்டாலும் கவலையில்லை.. அந்த சீன்ல நடி!.. எஸ்.ஏ.சியிடம் சிக்கிய விஜய், காப்பாற்றிய பொன்னம்பலம்!.
தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிக்கு பிறகு விஜய்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் தமிழ் சினிமாவில் விஜய் காலடி பதிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்.விஜய் சிறுவயதாக இருக்கும்போதே அவரால் சினிமாவில் சாதிக்க முடியும் என நம்பினார் எஸ்.ஏ சந்திரசேகர்.
எனவே அவர் இயக்கும் பல படங்களில் சிறுவர் கதாபாத்திரத்தை விஜய்க்கு அளித்தார். சொல்லப்போனால் விஜய் அந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே படத்தின் கதையில் ஒரு சிறுவர் கதாபாத்திரத்தை கண்டிப்பாக வைத்து விடுவார் எஸ்.ஏ.சி.
இந்த நிலையில் விஜய் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதற்காக 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார் எஸ்.ஏ சந்திரசேகர். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுக்கவில்லை.
விஜய்க்கு தந்தை வைத்த டாஸ்க்:
அப்போது விஜயகாந்த் பெரும் நடிகராக இருந்தார். எனவே அவரது திரைப்படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் விஜய்யை பிரபலப்படுத்தலாம் என நினைத்தார் சந்திரசேகர். எனவே செந்தூரப்பாண்டி என்கிற திரைப்படத்தில் விஜயகாந்தின் தம்பி கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விஜய் வந்து சண்டை போடுவது போன்ற காட்சி ஒன்று இருந்தது.
அப்போதெல்லாம் விஜய் அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதற்கு மிகவும் பயப்படார். ஏனெனில் அப்போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.
உதவிய பொன்னம்பலம்:
ஆனால் விஜய்க்கு அடிபட்டாலும் பரவாயில்லை அந்த காட்சியை எடுத்தாக வேண்டும் என கூறி ஆம்புலன்ஸ் வரை அழைத்து வந்து வைத்து விட்டார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். அப்போது படத்தில் ஸ்டண்ட்மெனாக வேலை பார்த்து வந்த பொன்னம்பலம் விஜய்க்கு ஆறுதல் கூறினார்.
நீ கண்ணாடியை உடைக்கும் நேரத்தில் ஓரத்தில் இருந்து நான் கண்ணாடியை உடைத்து விடுகிறேன். நீ ஆக்ஷன் மட்டும் செய்தால் போதும் என்று கூறினார் பொன்னம்பலம், ஆனால் கீழே விழும் பொழுது கைகளை தரையில் வைத்து விடாதே.
உடைந்த கண்ணாடிகள் உன் கைகளில் குத்தி விடும் என கூறி அதற்காக விஜய் கைகளில் பேண்டேஜ்களை சுற்றிவிட்டு விஜய்க்கு ஒரு அடி கூட விழாமல் அந்த காட்சியை படமாக்க உதவியுள்ளார் பொன்னம்பலம். இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாக்கியராஜ் மனைவி இல்லன்னா நான் இல்ல!.. உண்மையை பகிர்த்த டிவி சீரியல் நடிகை…