Connect with us
kamal

Cinema News

கை நிறைய காசு! யாருக்கு கிடைக்கும்? மதி கெட்டுப் போய் கமல் படத்தில் மிஸ் செய்த பொன்னம்பலம்

Ponnambalam: தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டியவர் நடிகர் பொன்னம்பலம். நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் மிரட்டும் தோற்றம் என பார்த்தவுடன் ரசிகர்களை பயப்பட வைத்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் மெயின் வில்லனாகவும் ஆரம்ப காலங்களில் அடியாள்களில் ஒருவராகவுமே நடித்திருப்பார்.

விஜயகாந்த் பிரபு சத்யராஜ் போன்ற பல நடிகர்களுடன் சண்டை போடும் காட்சிகளில் இவரின் ஸ்டண்ட் அனைவரையும் வியக்க வைக்கும். பெரும்பாலும் விஜயகாந்த் நடித்த படங்களில் பொன்னம்பலம் நடித்திருப்பார். அதேபோல பொன்னம்பலத்தின் பல நிகழ்வுகளில் விஜயகாந்த் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: வேலையில்லா பட்டதாரி வாய்ப்பை அமலா பால் இப்படித்தான் வாங்கினாரா?.. விவாகரத்துக்கு அதுதான் காரணமா?..

இடையிலேயே பொன்னம்பலத்தின் உடல் நிலை சரியில்லாத போது பல நடிகர்கள் அவருக்கு உதவியதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த நிலையில் கமல் படத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய ஒரு லம்பான தொகை என்னாலேயே கிடைக்காமல் போய்விட்டது என புலம்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க பொன்னம்பலத்திற்கு அழைப்பு வந்திருக்கிறது .

அதுவரை ஸ்டண்ட் கலைஞராகவே இருந்த பொன்னம்பலம் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவரை தேடி சென்று இருக்கிறது. அப்போது பொன்னம்பலம் ஸ்டண்ட் கலைஞராக இருந்து இப்போது கேரக்டர் ரோலில் நடிக்கும் போது முன்னதாக பெற்ற தொகையை விட குறைவாக கொடுத்தால் நான் நடிக்க மாட்டேன்.

இதையும் படிங்க: சின்ன மருமகள் சீரியல் நடிகை செய்த சூப்பர் ஷாப்பிங்!. வைரல் வீடியோ பாருங்க!…

300 500 என்று கொடுத்தால் நான் இந்த கேரக்டரில் நடிக்கவே மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். உடனே தயாரிப்பாளரிடம் போய் பேச சொல்லி பொன்னம்பலத்திடம் சொல்ல அந்த படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்திடம் பொன்னம்பலம் போய் பேசி இருக்கிறார். என்ன ஏது என்று கூட கேட்காமல் இதுவரை ஸ்டண்ட் கலைஞராகவே நான் நடித்து விட்டேன்.

இப்போது கேரக்டர் ரோலில் நடிப்பதாக இருந்தால் எனக்கு தினமும் 2000 வீதம் மொத்தம் பத்து நாட்களுக்கு 20 ஆயிரம் என சம்பளத்தை கொடுங்கள் எனக் கூறி இருக்கிறார். அவரை ஆச்சரியத்துடனே பார்த்துக் கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலம்  ‘பரவாயில்லப்பா நான் தினமும் 5000 சம்பளமாக கொடுக்க வேண்டும் என நினைத்தேன், நீ 2000 என்று சொல்லிவிட்டாய்’ என 20 ஆயிரம் தூக்கிக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் பொன்னம்பலத்திற்கு நாமளே நமக்கு வச்சிக்கிட்ட ஆப்பு என சொல்லி அந்த சம்பவத்தை பற்றி இப்போது அந்த பேட்டியில் புலம்பி தீர்த்துள்ளார்.

இதையும் படிங்க: கர்ப்ப வயிற்றுடன் கல்கி பட புரமோஷனில் பங்கேற்ற பிரபல நடிகை!.. கமல்ஹாசன் அந்த ரோலில் நடிக்கலையா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top