தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகி பிறகு படங்களில் வில்லனாக வாய்ப்பை கிடைத்து நடிகராக மாறியவர் நடிகர் பொன்னம்பலம். பொன்னம்பலம் தனித்துவமான ஒரு நடிப்புத் திறனை கொண்டிருந்தார் அந்த நடிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது அதனால்தான் எளிதாக அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது.
முதன்முதலாக கமல்ஹாசன் நடித்த சத்யா திரைப்படத்தின் மூலமாக இவர் திரையில் தோன்றினார் அதற்குப் பிறகு, மைக்கேல் மதன காமராஜன், ராஜா கைய வச்சா போன்ற திரைப்படங்களில் வரிசையாக இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. 1994 ஆம் ஆண்டு வந்த நாட்டாமை திரைப்படம் பொன்னம்பலத்திற்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. ஏனெனில் அந்த திரைப்படத்தில் முக்கிய வில்லனாக அவர் நடித்திருந்தார்.
சினிமாவில் இவ்வளவு நடித்திருந்தாலும் பொன்னம்பலத்தின் குடும்பத்தை பொறுத்தவரை அவரது தாயார் தொடர்ந்து பொன்னம்பலம் நடிகர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்:
நடிகர் ஆவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸில் இருந்துள்ளார் பொன்னம்பலம். அப்பொழுதுதான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சமயத்தில் அவரது அம்மா கூலி வேலைக்கு சென்றாலும் பரவாயில்லை சினிமாவிற்கு மட்டும் செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து பொன்னம்பலம் கூறும் பொழுது அவரது தந்தை மற்றும் தந்தையின் தம்பி இருவரும் பெரும் பணக்காரர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் சினிமாவில் தங்களது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தனர். இதனால் குடும்பமே பெரும் கஷ்ட நிலையை சந்தித்தது. எனவே நான் சினிமாவிற்கு செல்ல வேண்டாம் என்று எங்கள் வீட்டில் கூறினர். ஆனால் நான் சினிமாவில் மோசமான நிலைக்கு செல்லவில்லை மாறாக நல்ல நிலையை அடைந்து விட்டேன் என்று பொன்னம்பலம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அன்புள்ள அப்பா! அப்பா! தந்தையர் தினத்தில் கேப்டனை சந்தோஷப்படுத்திய மகன்கள்!
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…