Cinema History
வடிவேலு உனக்கு தில் இருந்தா விஜயகாந்துகிட்ட நேர்ல இத கேட்பியா?!.. சவால் விட்ட பொன்னம்பலம்!…
ராஜ்கிரண் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வடிவேலு. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வைகைப்புயல் வடிவேலு. ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். சினிமாவில் வாய்ப்பில்லாமல் வடிவேலு கஷ்டப்படட போது சின்ன கவுண்டர் படத்தில் தனக்கு குடைபிடிக்கும் வேடத்தை கொடுத்தார் விஜயகாந்த். அதோடு, வடிவேலுவுக்கு அப்போது சரியான உடைகள் இல்லாததால் வேஷ்டி, சட்டைகளையும் விஜயகாந்த் வாங்கி கொடுத்தார்.
ஆனால், பின்னாளில் வளர்ந்த வடிவேலு விஜயகாந்துக்கு எதிராகவே திரும்பினார். வேண்டுமென்றே விஜயகாந்தின் வீட்டின் அருகே போய் வீடு கட்டினார். சாலையில் கார் நிறுத்துவது தொடர்பான பிரச்சனையில் விஜயகாந்த் தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறில் முடிந்தது. அந்த கோபம் வடிவேலுவுக்கு விஜயகாந்த் மீது திரும்பிது. எனவே, திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போய் விஜயகாந்தை கண்டபடி திட்டினார். வாய்க்கு வந்தபடியெல்லாம் அவரை ‘அவன், இவன்’ என்றெல்லாம் விமர்சித்தார். ஒருகட்டத்தில் திரையுலகவே வடிவேலுவை ஓரம் கட்டியது.
இந்நிலையில், விஜயகாந்துடன் பல திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்த பொன்னம்பலம் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘தலைநகரம் படத்தில் வடிவேலுவுடன் நான் நடித்தபோது மறைமுகமாக விஜயகாந்தை கிண்டலடிப்பது போல் ஒரு வசனம் பேசினார். உடனே அதை நான் கண்டித்தேன். விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் நீ பேசுவது தவறு.. உன்னை பற்றி மற்றவர் பேசினால் அதுவும் தவறு’ என சொன்னேன்.
வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்ட போது வடிவேலு நல்லவனாத்தான் இருந்தான். அவன் போராடித்தான் அந்த இடத்தை அடைந்தான். நல்ல திறமைசாலி. அது இல்லாமல் சினிமாவில் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. ஆனால், விஜயகாந்தை அவன் தவறாக புரிந்துகொண்டான். ‘விஜயகாந்த் மீது உனக்கு கோபம் இருந்தால் நேராக அவர் முன் போய் நின்று கேட்டிருந்தால் அவர் பதில் சொல்லி இருப்பார். உனக்கு அந்த தில்லு இருக்கா?’. அதைவிட்டு அவரை திட்டி பேசுவதெல்லாம் நல்ல செயல் அல்ல’ என பொன்னம்பலம் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நீ யார் என கேட்டார் இளையராஜா!.. சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பரணியின் தற்போதைய நிலை!..