விஷாலின் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லக்ஷ்மி அடுத்து தனுஷ் உடன் இணைந்து ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். சாய் பல்லவியின் கார்கி திரைப்படத்தில் பத்திரிகையாளராக சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தார்.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழ் மற்றும் மலையாள படங்களில் மாறி மாறி நடித்து வந்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு பூங்குழலி கதாபாத்திரம் கிடைத்தது.
இதையும் படிங்க: அஜித் வீட்டு முன்னாடி கத்தி அழுதேன்! அப்போ படத்தை தெறிக்க விட்டுருவாரு.. ஆதிக் சொன்ன அந்த விஷயம்
சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கே ரொம்பவே பிடித்தமான கதாபாத்திரம். துணிச்சலான படகோட்டி பெண்ணான அவர் தான் இலங்கைக்கு அருள்மொழி வர்மனை படகில் அழைத்துச் சென்று இருப்பார். அதே போல வந்தியத்தேவனையும் பூங்குழலி தான் இலங்கைக்கு கொண்டு செல்வார். அருள்மொழி வர்மனின் காதலியும் இந்த பூங்குழலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யா லட்சுமி விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
இதையும் படிங்க: இனிமே மகனை நம்பி பிரயோஜனம் இல்லை!.. வரிசையா ஹீரோயின்களை இறக்கிய மெகா ஸ்டார்!.. இத்தனை பேரா?..
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக அவர் ’பா’ கழுத்து வைத்த உடைகளை அணிந்து கொண்டு படு தாராளமாக போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார். ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அழகை ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து சொக்கிப் போய் வருகின்றனர்.
அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் ஐஸ்வர்யா லக்ஷ்மி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…