More
Categories: Cinema News latest news

“பொன்னியின் செல்வன்” படத்துக்கு பூஜை போட்டாலே அபசகுணம் தான்.. மறைக்கப்பட்ட திகில் அனுபவங்களை பகிர்ந்த மனோ பாலா..

அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவல் 1950களில் “கல்கி” என்ற இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. இந்நாவல் வாசகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் எம்ஜிஆர் இந்நாவலை திரைப்படமாக எடுக்க முயன்றார். ஆனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பலரும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களாலும் இதனை திரைப்படமாக எடுக்க முயலவில்லை.

Advertising
Advertising

இதனால் “பொன்னியின் செல்வனை” தொட்டாலே எதாவது அபசகுணம் நேர்ந்துவிடும் என்று ஒரு கதை பரவி வந்தது. மேலும் ஏற்கனவே ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் மீது கரூவூர் சித்தரின் சாபம் வேறு இருப்பதாக ஒரு பழங்கதை உள்ளது. ஆதலால் இது பெரும் மர்மமாகவே இருந்தது. அதனை தொடர்ந்து தான் 2009 ஆம் ஆண்டு மணி ரத்னம் இந்த நாவலை படமாக்க முயன்றார்.

எனினும் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தற்போது வெளிவர தயாராக இருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இயக்குனரும் நடிகருமான மனோ பாலா “பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நான் இயக்க மூன்று முறை பூஜை போட்டும்  படம் நின்றுபோய் விட்டது. பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க முயற்சி செய்வார்கள், பூஜை போடுவார்கள், அவர்கள் வாழ்க்கையில் எதாவது அசம்பாவிதம் நடக்கும். அதன் பின் படம் நின்றுபோகும்” என கூறினார்.

மேலும் கூறிய அவர் “பொன்னியின் செல்வன் பூஜை போட்ட அன்று உடல் நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இப்படி பூஜை போட்டவர்களுக்கெல்லாம் எதாவது ஒன்று நடக்கும்” என திகிலாக கூறினார்.

ஏற்கனவே தஞ்சை பெரியகோவில், ராஜ ராஜ சோழன் குறித்த பல மர்ம கதைகள் உலாவி வரும் நிலையில் மனோ பாலாவின் பேச்சு திகிலை கிளப்பியுள்ளது.

Published by
Arun Prasad