திரைக்கதை ஆசிரியரை புறக்கணிக்கும் மணிரத்னம்… பிரபல எழுத்தாளருக்கு மட்டும் புரோமோஷனா?? புதிதாக எழுந்த சர்ச்சை…

Published on: October 11, 2022
---Advertisement---

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு, இப்போதும் திரையரங்குகளில் அலைகடல் என கூட்டம் குவிந்து வருகிறது. அந்த அளவுக்கு இத்திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த மாதம் வெளியாக இருந்த பல திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போனது. அந்த அளவுக்கு திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் 5 மொழிகளிலும் வெளியாகியுள்ளதால் தமிழகத்தை போலவே மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் உலக அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் சுமார் ரூ. 250 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இணையத்தில் மணிரத்னம் மேல் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் திரைக்கதையில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியவர் இளங்கோ குமரவேல். இவர் நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர். “பயணம்”, “காற்றின் மொழி”, “சர்வம் தாள மயம்”, “ஜெய் பீம்”, “அபியும் நானும்” போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் நாடகத்துறையில் இருந்தபோது பல நாடகங்களையும் இயற்றியும் உள்ளார். அவ்வாறு இவர் இயற்றிய நாடகங்களில் “பொன்னியின் செல்வன்” நாடகமும் ஒன்று.

“பொன்னியின் செல்வன்” நாவலை கிட்டத்தட்ட 4 மணி நேரமாக சுருக்கி நாடகமாக இயற்றியவர் இளங்கோ குமரவேல். இதனால்தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் திரைக்கதையில் இளங்கோ குமரவேல் பணியாற்றினார். இந்த நிலையில் மணிரத்னம் இவரின் பெயரை எந்த விழாவிலும் குறிப்பிடவில்லை என ஒரு சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

அதாவது மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வெளிவருவதற்கு முன் அத்திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த விழாக்களில் எல்லாம் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் பெயரை மட்டும் குறிப்பிட்டு பல இடங்களில் பேசினார், ஆனால் இளங்கோ குமரவேலின் பெயரை ஏன் எங்குமே குறிப்பிடவில்லை என பல கேள்விகள் எழுந்துள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன், மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர். மேலும் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தில் ஜெயமோகன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.