பொன்னியின் செல்வனால் த்ரிஷாவுக்கு வந்த வாழ்வு… கச்சிதமாக போட்ட பிளான்!!

மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, சீயான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

படக்குழுவினர் சென்னை, மும்பை, ஹைதரபாத் என பல ஊர்களில் இத்திரைப்படத்தை புரோமோட் செய்துவருகிறார்கள். திரையரங்குகளில் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் 60 வருட கனவு நிஜமாகி உள்ள நிலையில், இத்திரைப்படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் பரவலாக ரசிக்கும்படி அமைந்துள்ளது. மேலும் சமீப காலமாக இத்திரைப்படத்திற்காக வெளியிடப்பட்ட புரோமோஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு பரவசத்தை உண்டுசெய்துள்ளது. “பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற திரைப்படங்களின் கலெக்சனை பொன்னியின் செல்வன் மிஞ்சும்” என இணையத்தில் ரசிகர்கள் பலரும் உற்சாகமிகுதியில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் த்ரிஷா, “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மாஸான வரவேற்பை பயன்படுத்தி ஒரு கச்சிதமான பிளான் ஒன்றை திட்டமிட்டிருக்கிறாராம். அதாவது இனி வரும் திரைப்படங்களில் தனது சம்பளத்தை 2 கோடிக்கு உயர்த்தியுள்ளாராம். இந்த செய்தி சினிமாத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷா சம்பளம் உயர்த்தினாலுமே அவருக்கான மார்க்கெட் தமிழ் சினிமாவில் என்றும் நிலையாக உண்டு.

எனினும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பயன்படுத்தி த்ரிஷா கச்சிதமாக பிளான் போட்டிருப்பது பலரையும் வியக்கவைத்துள்ளது.

Related Articles
Next Story
Share it