அய்யயோ இந்த அம்மணி ஹீரோயினா? தளபதி69க்கு ஆரம்பமே இப்படி ஒரு கொடுமையா?
Thalapathy69: விஜயின் சினிமா கேரியரில் கடைசி படமாக அமைய இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் லீக் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் விஜய். சமீபகாலமாகவே அவரது திரைப்படங்கள் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. இதனால் அவர் நடித்தால் தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் இல்லை என்னும் நிலை உருவாகிவிட்டது. வெற்றி கொடியில் பறந்து கொண்டிருந்த சமயம் தன்னுடைய அரசியல் கட்சியை நடிகர் விஜய் அறிவித்தார்.
இதையும் படிங்க:நடிகர்களில் தி பெஸ்ட் அஜித்தான்! யார்கிட்டயும் இல்லாத ஒரு குணம்.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்
அதைத்தொடர்ந்து தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துக் கொண்டு சினிமாவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த லிஸ்டில் கோட் திரைப்படத்தை முடித்து இருக்கும் நடிகர் விஜய் அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் விரும்பும் சாதாரண கதையாகவே இப்படம் அமையும் என ஹெச் வினோத் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்
தற்போது இப்படத்தின் பட குழு தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிப்பார் என தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
கோலிவுட்டில் இதுவரை சில படங்கள் மட்டுமே நடித்த பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோதே ரசிகர்கள் அது குறித்த விமர்சனம் செய்தனர். அவர்கள் கேலி செய்தது போலவே பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் விஜயின் கேரியரில் கடைசி படமாக அமைய இருக்கும் தளபதி 69 படத்தில் இந்த விபரீத வேலை தேவையா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி விடுகின்றனர்.